ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் திடீர் உயர்வு.
ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் 14% வரை உயர்ந்து மும்பை பங்குச்சந்தையில் 288.75 ரூபாய் வரையில் உயர்ந்து பலருக்கும் அதிர்ச்சி கொடுத்தது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ல் இருந்து அதன் நிதியியல் பிரிவைத் தனியாகப் பிரித்ததிலிருந்து முதலீட்டாளர்கள் பெரும் லாபத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், இன்று இதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
சமீபத்தில் தான் ஜியோ ஃபைனான்சியல் தனது வர்த்தக மாடலை மாற்றியதன் மூலம் பங்குச்சந்தையில் மந்த நிலையை எதிர்கொண்டது. இந்த நிலையில் இன்று பதிவான திடீர் உயர்வுக்கு என்ன காரணம்.பெரும் நெருக்கடியில் மாட்டிக்கொண்டு இருக்கும் பேடிஎம்-ன் தாய் நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ், தனது வேலெட் வர்த்தகத்தை விற்பனை செய்ய முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் NBFC மற்றும் தனியார் துறை முன்னணி வங்கியான HDFC வங்கியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியானது.
ஒரு மூத்த ஃபின்டெக் மற்றும் வங்கித் துறையின் நிர்வாகி ஒருவர் பிசினஸ் லைன் பத்திரியிடம், Paytm Payments பேங்க்-ன் கீழ் இயங்கும் Paytm வேலெட் வர்த்தகத்தை HDFC வங்கி மற்றும்ஜியோஃபைனான்சியல் ஆகியவற்றுக்கு விற்பனை செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பேடிஎம்-ன் விஜய் சேகர் ஷர்மாவின் டீம் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து தனது வர்த்தகத்தை விற்பதற்காக ஜியோ பைனான்சியல் சேவை நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படும் நிலையில், RBI தடைக்கு முன்னதாக HDFC வங்கியுடன் பேச்சுவார்த்தை தொடங்கியதாகத் தெரிகிறது. பிப்ரவரி 5ஆம் தேதி மாலை முகேஷ் அம்பானியின் ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் (ஜேஎஃப்எஸ்எல்), Paytm வேலெட் வர்த்தகத்தை பெறுவதற்கு One 97 Communications நிறுவனத்துடன் உடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது.
பேடிஎம் நிறுவனத்தில் தற்போது நடந்து வரும் அனைத்து பிரச்சனைக்கும் துவக்கப் புள்ளியாக இருந்தது, நிதியியல் தளங்கள் மற்றும் பேடிஎம் பேமெண்ட் வங்கிக்கு மத்தியில் முறைகேடாக, சந்தேகத்திற்கு இடமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிதியை விதிமுறைக்கு மீறி நிதி பரிமாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளதை ஆர்பிஐ கண்டுபிடித்துள்ளது. இதேபோல் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி KYC விதிகளைப் பூர்த்திச் செய்யாத பல லட்சம் கணக்குகளில் இருந்து பேமெண்ட்களைப் பிராசஸ் செய்துள்ளது. இதோடு ஓரே பான் கார்டு வைத்து பல கணக்குகள் திறக்க பயன்படுத்தப்பட்ட1000த்திற்கும் அதிகமான வழக்குகள் உள்ளதையும் ஆர்பிஐ கண்டுபிடித்துள்ளது.
0
Leave a Reply