25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >> நம்மை விட்டுப் பிரிந்த, வாழ்ந்த தெய்வம் டாக்டர். G.ராஜசேகர் (எ) கண்ணாவிற்கு இதய அஞ்சலி ! >> ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில்  ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்ஸவம் . >> ராஜபாளையம் மேலப்பாட்ட கரிசல்குளம் ஊராட்சி இந்திரா நகர் குடியிருப்பு மக்களுக்கு குடிநீர் சப்ளை கலங்கலாக வருவதால் நோய் அச்சத்தில் மக்கள் உள்ளனர். >>


சித்திரை திருநாளை முன்னிட்டு இளைஞர்களுக்கான கபடி மற்றும் வாலிபால் போட்டிகள் நடைபெறவுள்ளது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சித்திரை திருநாளை முன்னிட்டு இளைஞர்களுக்கான கபடி மற்றும் வாலிபால் போட்டிகள் நடைபெறவுள்ளது.

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில், சித்திரை திருநாளை முன்னிட்டு மாவட்ட இளைஞர்களுக்கான மாபெரும் கபடி மற்றும் கையுந்து போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு  29.03.2025 முதல் 04.04.2025 வரை நடைபெற உள்ளது. அதன்படி, ஆண்களுக்கு வட்டார அளவிலும், பெண்களுக்கு மாவட்ட அளவிலும் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.அதன்படி, ஆண்களுக்கான வட்டார அளவிலான போட்டிகளில் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் அருப்புக்கோட்டை செட்டிகுறிச்சி, ஸ்ரீசௌடாம்பிகா பொறியியல் கல்லூரியில் 29.03.2025 அன்று கபடி மற்றும் 31.03.2025 அன்று கையுந்து போட்டிகளில் கலந்து கொள்ள பொறுப்பு அலுவலர்களை 9345036559, 94435-44350 என்ற எண்ணிலும், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மல்லாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளியில்; 29.03.2025 அன்று கபடி மற்றும் 31.03.2025 அன்று கையுந்து போட்டிகளில் கலந்து கொள்ள பொறுப்பு அலுவலர்களை 9842909574, 9442418663 என்ற எண்ணிலும்,

விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தில் விருதுநகர் மாவட்;ட விளையாட்டு அரங்கத்தில் 29.03.2025 அன்று கையுந்து மற்றும் 31.03.2025 அன்று கபடி போட்டிகளில் கலந்து கொள்ள பொறுப்பு அலுவலர்களை 9791634373, 7639525633 என்ற எண்ணிலும், சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் சாத்தூர் எட்வர்டு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 03.04.2025 அன்று கபடி மற்றும்  04.04.2025 அன்று கையுந்து போட்டிகளில் கலந்து கொள்ள பொறுப்பு அலுவலர்களை 9486497010, 8695966669 என்ற எண்ணிலும்,நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் இலுப்பையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 29.03.2025 அன்று கையுந்து  மற்றும்  31.03.2025 அன்று கபடி போட்டிகளில் கலந்து கொள்ள பொறுப்பு அலுவலர்களை 9791229305, 7010156632 என்ற எண்ணிலும், திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில் கல்லூரணி எஸ்.பி.கே.மேல்நிலைப்பள்ளியில் 03.04.2025 அன்று கபடி மற்றும் 04.04.2025 அன்று கையுந்து போட்டிகளில் கலந்து கொள்ள பொறுப்பு அலுவலர்களை 9445383316, 9080092027 என்ற எண்ணிலும்,

சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரியில்  03.04.2025 அன்று கபடி மற்றும் 04.04.2025 அன்று கையுந்து போட்டிகளில் கலந்து கொள்ள பொறுப்பு அலுவலர்களை 9994846801, 9865071770 என்ற எண்ணிலும், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் தளவாய்புரம் மாரிமுத்து நாடார் மேல்நிலைப்பள்ளியில் 29.03.2025 அன்று கபடி மற்றும் 31.03.2025 அன்று கையுந்து போட்டிகளில் கலந்து கொள்ள பொறுப்பு அலுவலர்களை 6369804545, 8667403340 என்ற எண்ணிலும்,
திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் மங்காபுரம் மேல்நிலைப்பள்ளியில் 29.03.2025 அன்று கபடி மற்றும் 31.03.2025 அன்று கையுந்து போட்டிகளில் கலந்து கொள்ள பொறுப்பு அலுவலர்களை 7305574443, 8428272694 என்ற எண்ணிலும், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் செவல்பட்டி பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரியில் 03.04.2025 அன்று கையுந்து மற்றும்  31.03.2025 அன்று கபடி போட்டிகளில் கலந்து கொள்ள பொறுப்பு அலுவலர்களை 9629648653, 9486427621 என்ற எண்ணிலும், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் வத்திராயிருப்பு இந்து மேல்நிலைப்பள்ளியில்; 29.03.2025 அன்று கையுந்து மற்றும்  31.03.2025 அன்று கபடி போட்டிகளில் கலந்து கொள்ள பொறுப்பு அலுவலரை 8925491170 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

பெண்களுக்காக 09.04.2025 மற்றும் 10.04.2025 ஆகிய தினங்கள் நடைபெறவுள்ள மாவட்ட அளவிலான கபடி போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள அணிகள் பொறுப்பு அலுவலர்களை 9488151214, 9994511966 மற்றும் 9865071770 ஆகிய  எண்ணிலும், கையுந்து போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள அணிகள் பொறுப்பு அலுவலர்களை 9994160149 மற்றும் 9894693210 ஆகிய  எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.வட்டார அளவில் நடத்தப்படும் ஆண்களுக்கான போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசு ரூ.10,000ஃ- மும், இரண்டாம் பரிசு ரூ.5,000ஃ-மும் வழங்கப்படும். வட்டார அளவில் வெற்றி பெறும் தலா ஒரு அணிகள் 12.04.2025 அன்று மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் நடைபெறும் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கு பெறுவர்.


மேலும், மாவட்ட அளவில் நடத்தப்படும் போட்டிகளில் வெற்றி பெறும் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு முதல் பரிசு ரூ.1.20 இலட்சம் மற்றும் இரண்டாம் பரிசு ரூ.90 ஆயிரம் வழங்கப்படும்.இந்த போட்டிகளில் கலந்து கொள்ளும் அணிகள் வயது சான்று அல்லது ஆதார் கார்டு நகலுடன் படிவத்தை பூர்த்தி செய்து தொடர்புடைய அலுவலர்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.எனவே, மாவட்ட அளவிலான போட்டிகளில் அதிக அளவில் இளைஞர்கள் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News