தனுஷை வைத்து இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ள திரைப்படத்தை கமல்ஹாசன் தயாரிக்கிறார்.
நெல்சன் திலிப் குமார் தற்போது ரஜினி நடிப்பில் ஜெயிலர் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். படத்தில் தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
பான் இந்தியா முறையில் உருவாகும் இப்படம் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சுதந்திர தின விடுமுறையையொட்டி படம் வெளியாகிறது.
இதைத் தொடர்ந்து தனுஷ் நடிக்கும் படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்க உள்ளார். அந்த திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கான முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் படுதோல்வியை தழுவியது. இதன் காரணமாக ஜெயிலர் திரைப்படத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதே சமயம் நடிகர் கமல்ஹாசனுக்கு ஒரு கதை கூறியிருந்தார்.
அந்த திரைப்படத்திற்கு முன்பு கமல்ஹாசன் தயாரிப்பில் நெல்சன் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தமாகி விட்டார். அதில் தனுஷ் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார், ஜெயிலர் திரைப்படத்தின் பணிகள் முடிவடைந்து படம் வெளியான பிறகு, அடுத்த படத்திற்கான பணிகளை நெல்சன் மேற்கொள்ள உள்ளார்.
0
Leave a Reply