கீரை கட்லெட்.
தேவையான பொருட்கள் : -
பசலைக்கீரை 1 கட்டு, உருளைக் கிழங்கு 3, பச்சை மிளகாய்
3, இஞ்சி 1 துண்டு, ப்ரெட்2 ஸ்லைஸ், சீஸ் துருவல் 2 டேபிள் ஸ்பூன்,
மைதா அரைகப், ப்ரெட் தூள், உப்பு தேவைக்கு.
செய்முறை:
கீரையைச் சுத்தம் செய்து நறுக்கி வையுங்கள். கிழங்கை வேகவைத்து மசித்து வையுங்கள். இஞ்சி, பச்சை மிளகாய் இரண்டையும் சேர்த்து நைஸாக அரைத்தெடுங்கள். இரண்டு கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் கீரையை இரண்டு நிமிடம் போட்டு மூடிவையுங்கள். ஆறியதும் தண்ணீரை வடித்துவிட்டு கீரையை அரைத்தெடுங்கள். ப்ரெட் துண்டுகளை (ஓரங்களை நீக்கிவிட்டு) நீரில் நனைத்துப் பிழிந்து வையுங்கள். கீரைக் கலவையுடன் கிழங்கு, உப்பு, சீஸ், இஞ்சி மிளகாய் விழுது, ப்ரெட் ஆகியவற்றைச் சேர்த்து பிசையுங்கள். சிறிது சிறிதாக எடுத்து விரும்பிய வடிவில் செய்து மைதா கரைசலில் முக்கி எடுத்து, ப்ரெட் தூளில் பிரட்டி சூடான எண்ணையில் பொரித்தெடுங்கள்.சுவையான இந்த கட்லெட்டை சைடு டிஷ் எதுவுமின்றி சும்மாவே சாப்பிடலாம்.
0
Leave a Reply