கீரை அடை .
தேவையான பொருட்கள் :-
புழுங்கல் அரிசி1 கப், பாசிப்பருப்பு முக்கால் கப், கடலைப் பருப்பு, துவரம் பருப்பு தலா அரை கப், உளுந்து கால் கப், முருங்கைக் கீரை(உதிர்த்தது)2 கப்,சின்னவெங்காயம்1கப், மிளகாய்த்தூள்2 டீஸ்பூன், தேங்காய்த் துறுவல் அரை கப்,பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன் அல்லது சோம்பு 1 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் தேவைக்கு.
செய்முறை: -
அரிசியைத் தனியாகவும், பருப்பு வகைகளை ஒன்றாகச் சேர்த்தும், ஒரு மணி நேரம் ஊறவையுங்கள். அரிசியைச் சற்று கரகரப்பாக அரைத்து, பிறகு பருப்புக் கலவை, சோம்பு சேர்த்து(லேசாகத் தண்ணீர் தெளித்து) கரகரப்பாக அரைத்தெடுங்கள். வெங்காயத்தைப் பொடியாக நறுக்குங்கள். அதில் மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள்(சோம்பு சேர்க்காவிட்டால்) கீரை, வெங்காயம், தேங்காய்த் துறுவல், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து சிறுசிறு அடைகளாக ஊற்றுங்கள். சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் திருப்பிப் போட்டு வேகவைத்தெடுங்கள்.சட்னி சாம்பாருடன் சாப்பிட்டால் அசத்தலாக இருக்கும்.
முருங்கைக் கீரைதான் என்றில்லை, முளைக்கீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணி போன்றவற்றையும் அடைக்கு உபயோகிக்கலாம்.
0
Leave a Reply