கல்லீரலைச் சரிசெய்யும் விளாம்பழம்
விளாம்பழத்தில் உள்ள சத்துக்கள் :- விளாம்பழங்களில் 70 சதவிதம் ஈரப்பதம், 7.3 சதவிதம் புரத சத்து, 0.6 சதவிதம் கொழுப்பு சத்து, 1.9 சதவிதம் தாது உப்புக்கள், 100 கிராம் பழத்தில் 70 மி.கி. ரிபோபிளேவின் மற்றும் 7.2 சதவிதம் சர்க்கரைச் சத்து ஆகியன அடங்கியுள்ளன.விளாம்பழம் சாப்பிடுவதால் ரத்தம் அதிகரித்து, ரத்தத்தில் உள்ள கெட்ட செல்களை அழிக்கிறது.
உடலில் உண்டாகும் அஜீரண குறைபாடு, பசியின்மை, கோழை அகற்றுதல், பல் எலும்பு உறுதிபட, உடல் உள் உறுப்புகள் வலுப்பட என பல வகைகளில் விளாம்பழம் சிறப்பாக பலன் தருகிறது.
விளாம்பழத்தை தினமும் சாப்பிடுவதால், மூட்டு வலி, உடல் வலி போன்றவற்றை போக்கும். மேலும் இதய துடிப்பை ஒரே சீராக வைத்திருக்கும்.
இருமல், கோழை, காசநோய், தொண்டைப்புன், ஆஸ்துமா நோய் இருப்பவர்கள் விளாம்பழத்துடன் திப்பிலிப்பொடி சேர்த்துச் சாப்பிடுவது மிகவும் நல்லது.
அடிக்கடி விக்கல் பிரச்னை இருப்பவர்கள், விளாம்பழம் சாப்பிட்டுவந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை கூடவே இல்லை என வருத்தப்படுபவர்கள், விளாம்பழ டானிக் சாப்பிட்டுவந்தால், உடல் எடைகூடும்.
கல்லீரலைச் சரிசெய்யும் ஆற்றல். விளாம்பழத்துக்கு உண்டு. கல்லீரல் சுருக்க நோயில் இருந்து கல்லீரவைக் காக்கும் ஆற்றல் இருப்பதால், குடிநோயில் இருந்து மீண்டவர்கள் கல்லீரலில் ஏற்பட்ட புண்கள் ஆற விளாம்பழத்தை சாப்பிடலாம்.
0
Leave a Reply