சர்வதேச டென்னிஸ் சென்னையில் நடந்த தொடரில் மேக்ஸ் ஹாக்கிஸ், கோப்பை வென்றார்.
தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் ,உலக டென்னிஸ் சங்கம் சார்பில் ஆடவருக்கான 'ஆதித்யன் ஐ.டி. சர்வதேச எப்.எம்-25' டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் 12க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த, சர்வதேசவீரர்கள் பங்கேற்றனர்.
சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. மைதானத்தில் இறுதிப்போட்டி, நெதர்லாந்தின் மேக்ஸ் ஹாக்கிஸ், நீல்ஸ் விஸ்கர் மோதினர். 2 மணி நேரம் 38 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தில், மேக்ஸ் ஹாக்கிஸ் 6-3, 6-7, 6-3 என வென்று கோப்பை கைப்பற்றினார். 3.97 லட்சம் ரூபாய் பரிசு, 25 'ஏடிபி' புள்ளிகள் பெற்றார். டி.என். டி.ஏ. தலைவர் விஜய் அமிர்தராஜ் இவருக்கு கோப்பையை வழங்கினார்.
0
Leave a Reply