கால்பந்து அரங்கில் பீலேவை விட சிறந்த வீரர் மெஸ்ஸி, " என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பாராட்டினார்.
எம். எஸ்.எஸ்., கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்காவில் மொத்தம் 30 அணிகள் பங்கேற்கின்றன. இதன் 2025 சீசனில் அர்ஜென்டினா கால்பந்து அணி கேப்டன் மெஸ்ஸி இடம் பெற்ற, இன்டர் மயாமி அணி முதன் முறையாக சாம்பியன் ஆனது.
மெஸ்ஸி தொடர்ந்து 2வது ஆண்டாக (2024, 2025) தொடரின் சிறந்த வீரராக தேர்வானார்.
இன்டர் மயாமி அணிக்கு நேற்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் பாராட்டு விழா நடந்தது. மெஸ்ஸி, லூயிஸ் சாரஸ், அலெண்டே,ரோட்ரிகோ டி பால் உள்ளிட்ட அணியினர், பங்கேற்றனர்.
எம்.எல்.எஸ்., தொடரில் கோப்பை வெல்வது என்பது சாதாரண விஷயமல்ல. மிகவும் கடினமானது. மயாமி அணிக்கு மெஸ்ஸி வந்தார், வென்றார். இவர் மீது அதிக நெருக்கடி இருந்தது. இதற்கு முன் நியூயார்க் காஸ்மோஸ்அணிக்காக பிரேசில் ஜாம்பவான் பீலே, இங்கு விளையாடியுள்ளார். ஆனால், அவரை விட நீங்கள் சிறந்த வீரராக திகழ்கிறீர்கள் எனடிரம்ப் கூறினார்.
'ஜெர்சியின்' இளஞ் சிகப்பு நிறத்தினால் ஆன, கால்பந்து, டிரம்ப் பெயர் பொறித்த மயாமி அணி 'ஜெர்சி', அதிபருக்கு வழங்கினர்.
0
Leave a Reply