தேசிய படைவீரர் கொடி நாளையொட்டி, முன்னாள் படைவீரர் நலத்துறை மூலம் 2024-ம் ஆண்டிற்கான கொடிநாள் வசூலை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (07.12.2024) தேசிய படைவீரர் கொடி நாளையொட்டி, முன்னாள் படைவீரர் நலத்துறை மூலம் 2024-ம் ஆண்டிற்கான கொடிநாள் வசூலை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் நன்கொடை வழங்கி கொடி நாள் வசூலினை தொடங்கி வைத்தார்.
முப்படைகளை சேர்ந்த வீரர்கள் நாட்டின் பாதுகாப்புக்காகவும், இயற்கை சீற்றத்தினால் ஏற்படும் புயல் மற்றும் வெள்ளத்தில் இருந்து மக்களை காப்பாற்றும் பொருட்டும், உள்நாட்டு கலவரத்தின்போதும் அமைதியை நிலைநாட்டும் வகையிலும் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள்.அவர்களது தியாகத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் டிசம்பர் 7-ந் தேதி படைவீரர் கொடி நாளாக அனுசரிக்கப்படுகிறது.முன்னாள் இராணுவ படைவீரர்கள் குறைத் தீர்க்கும் நாள் கூட்டத்தில் தொடர்ச்சியாக நிலம், குடும்பம் உள்ளிட்ட பிரச்சனைகள் தீர்வு காணும் வகையில் கோரிக்கை மனுக்கள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
முன்னாள் படைவீரர்கள் பணியில் இருக்கக்கூடியவர்களாக இருந்தாலும், ஓய்வு பெற்றவர்களாக இருந்தாலும், அவர்களின் குடும்பங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளையும் படைத்துறையின் மூலம் தலைமை அதிகாரிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பும் கோரிக்கை மனுக்களின் அடிப்படையிலும்,தொடர்புடைய அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. படை வீரர்களுக்கு கிடைக்கும் நலத்திட்ட உதவிகளும் மாவட்ட நிர்வாகம் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது.படைவீரர் கொடி நாளை முன்னிட்டு, திரட்டப்படும் நிதியில் இருந்து போரில் ஊனமுற்ற படை வீரர்கள், போரில் உயிர்நீத்த படைவீரர்களின் கைம்பெண்கள் ஆகியோரின் நலனுக்காகவும், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் விதவை நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்த பயன்படுத்தப்பட்டு வருகிறது.படைவீரர்கள் நலத்துறையின் மூலம் கடந்த 2023 ஆண்டு ரூ.89.83 இலட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
கடந்தாண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக நிதிஉதவிகளை வழங்க வேண்டும். இலக்கீட்டை காட்டிலும் அதிக வசூல் செய்து நம் தாய் திருநாட்டின் பாதுகாப்பிற்கு அல்லும் பகலும் அயராத பாடுபட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்கள் நலன் காப்பதில் பொது மக்களாகிய ஒவ்வொருவரின் பங்களிப்பும் இருந்திட வேண்டும் என தெரிவித்தார்.பின்னர் படைப்பணி முடித்து வெளிவந்த படைவீரர்கள், சார்ந்தோர், போர் விதவையருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் தேநீர் விருந்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது.முன்னதாக, 20 பயனாளிகளுக்கு ரூ.5,41,000/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில்முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குநர் (கூ/பொ), முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply