25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம், அகத்தியர் தமிழ் சங்கம்,கோதை நாச்சியார் தொண்டர் குழாம் சார்பில் நடந்த திருப்பாவை போட்டிகள் >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில்  ராம்கோ சமூக சேவை பிரிவு தலைவர் நிர்மலா ராஜா  சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இளம் தொழில் முனைவோர் சங்கம் சார்பில் இரண்டு நாள் கண்காட்சி நடந்தது. >> பூபதிராஜூ கூட்டுறவு நாணய வங்கி நுாற்றாண்டு விழா >> ராஜபாளையம் குடியிருப்பு பகுதியில் தொடர் திருட்டை தவிர்க்க நமக்கு நாமே திட்டத்தில் கண்காணிப்பு கேமரா. >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >>


‘மீனவ சமுதாயத்தைச்  சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்தியகுடிமைப் பணிகளில் சேருவதற்காக போட்டித் தேர்வில் சிறப்பிக்க ஆயத்தபயிற்சி” வழங்கப்பட உள்ளது
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

‘மீனவ சமுதாயத்தைச் சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்தியகுடிமைப் பணிகளில் சேருவதற்காக போட்டித் தேர்வில் சிறப்பிக்க ஆயத்தபயிற்சி” வழங்கப்பட உள்ளது

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் சென்னை அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் இணைந்து ஆண்டு தோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு குடிமைப்பணிகளுக்கான போட்டித் தேர்வில் கலந்துகொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளித்திடும் திட்டத்தினை செயல்படுத்திட தமிழ்நாடு அரசால் ஆணை வழங்கப்பட்டது.

      விருதுநகர் மாவட்டத்தில் மீனவ சமுதாயத்தைச் சார்ந்த உள்நாட்டு மீனவ கூட்டுறவுச் சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இச்சிறப்பு பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.
         
        இத்திட்டத்தின் கீழ் 2024-25-ம் ஆண்டிற்கு பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்பபடிவம் (Application Form)  மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை (Guidelines)  மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் அல்லது விருதுநகர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை அலுவலக வேலை நாட்களில் நேரில் தொடர்பு கொண்டு விலையின்றி பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பதாரர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணையதளத்தில் உள்ள அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பூர்த்தி செய்து, 05.11.2024-க்குள் விருதுநகர் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.

        மேலும், இத்திட்டம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு கீழ்க்காணும் உதவி இயக்குநர் அலுவலகம், மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை, 114 B27/1, வேல்சாமிநகர், விருதுநகர் - 626 001.  தொலைபேசி எண். : 04562-244707 என்ற முகவரியை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News