முள்ளங்கி கீரை உசிலி .
தேவையான பொருட்கள் -
முள்ளங்கி கீரை 12 இலைகள், கடலைப் பருப்பு 1கப்,சோம்பு அரை டீஸ்பூன், மிளகாய் வற்றல் 3,
உப்பு தேவைக்கு, கடுகு அரை டீஸ்பூன், உளுந்து 1 டீஸ்பூன், எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்..
செய்முறை:-
கீரையின் நடு நரம்பை நீக்கிவிட்டு, பொடியாக நறுக்குங்கள். கடலைப் பருப்பை ஒரு மணி நேரம்
ஊறவைத்து சோம்பு, மிளகாய் சேர்த்து கரகரப்பாக அரைத்தெடுங்கள். எண்ணெயைச் சூடாக்கி,
கடுகு, உளுந்து தாளித்து கீரை சேர்த்துக் கிளறி, சிறிதளவு தண்ணீர் தெளித்து உப்பு சேர்த்து மூடி
வையுங்கள். வெந்ததும், பருப்புக் கலவையைச் சேர்த்து உதிர் உதிராக வரும் வரை கிளறி
இறக்குங்கள்.
பொதுவாக முள்ளங்கி கீரை சிறிது கசப்பாக இருக்கும். ஆனால், இந்த முறையில்
செய்யும்போது சிறிது கூட கசப்பு இருக்காது என்பது ஸ்பெஷல்.
சாதத்துக்கு பெஸ்ட் சைடு டிஷ்.இதே உசிலியை பொன்னாங்கண்ணி கீரை, அரைக்கீரையிலும்
செய்யலாம்.
0
Leave a Reply