ராஜபாளையம் ரயில்வே சுரங்கப் பாதையை மண் போட்டு மூடப்பட்டதால் மக்கள் ஆதங்கப் படுகின்றனர்.
ராஜபாளையத்தில் ரயில்வே தண்டவாளத்தை இலகு ரக வாகனங்கள் கடக்க சுரங்கப்பாதை ரூ.3 கோடி மதிப்பில் அனுமதி அளிக்கப்பட்டது. ரயில்வே சார்பில் பணிகள் தொடங்கி கான்கிரீட் பிளாக்குகள் தண்டவாளம் கீழ்ப் பகுதியில் புதைக்கப்பட்டு சுரங்கப் பாதைக்கான கார்டர்கள் , பொருத்தப்பட்டு ரயில்வே தரப்பில் தற்போது பணிகள் முடிந்த நிலையில், நகர் பகுதி இணைக்கும் அணுகு சாலை பணிக்கு ஒத்துழைப்பு இல்லை."தொடர்ந்து ஏற்பட்ட தாமதமும் மழைநீர் தேங்குவதால் சுரங்கப் பாதையின் நிலைத்தன்மை பாதுகாக்க வேண்டி மண் போட்டு மீண்டும் மூடி விட்டனர்., அரசு துறையினர் இடையே பிரச்னையால் ஏற்பட்டுள்ள ராஜபாளையம் ரயில்வே சுரங்கப் பாதையை மண் போட்டு மூடப்பட்டதால் விரக்தியடைந்துள்ளனர்.
0
Leave a Reply