ரோகித் ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி 14வது சீசன் மதுரை சென்னையில், வரும் நவ. 28ல் நடக்க உள்ளது. இதில் இந்தியா, 'நடப்பு சாம்பியன்' ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 24 அணிகள், 6 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன.
இத்தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. கேப்டனாக ரோகித் நியமிக்கப்பட்டார். சமீபத்தில் மலேசியாவில் நடந்த, சுல்தான் ஆப் ஜோகர் கோப்பை (21 வயது) தொடரில் அணியை சிறப்பாக வழிநடத்திய இவர், வெள்ளிப்பதக்கம் பெற்றுத்தந்தார்.
0
Leave a Reply