சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நடைபெற்ற அரசு விழாவில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் 2025-2026
தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நடைபெற்ற அரசு விழாவில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் 2025-2026ன் கீழ், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ ,மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் பணிகளைத் தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, விருதுநகர் மாவட்டம், ம.ரெட்டியபட்டி, அரசு மேல்நிலைப்பள்ளியில், (14.11.2025) பள்ளிக்கல்வித்துறை / பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் 2025-2026ன் கீழ், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி அவர்கள் தலைமையில் 11-ஆம் வகுப்பு பயிலும் 144 பள்ளி மாணவ ,மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் வழங்கினார்.
நம்முடைய துணை முதலமைச்சர் அவர்கள் இன்றைக்கு சிவகங்கை மாவட்டத்தில் இந்த விழாவினை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த ம.ரெட்டியபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் இந்த விழாவினைத் துவக்கி வைப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.நம்முடைய தமிழ்நாடு அரசு குறிப்பாக நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கக்கூடிய இந்த நான்கரை ஆண்டு காலத்தில் தமிழ்நாட்டினுடைய பல்வேறு துறைகளில் மிக குறிப்பிடத்தக்க ஒரு முன்னேற்றம் அடைந்தாலும், பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்துள்ள துறை என்றால் பள்ளிக்கல்வித்துறையே ஆகும்.பள்ளிகளிலே படிக்கக்கூடிய மாணவர்களுக்கு தேவையான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், உயர்கல்வியைத்தொடர விரும்பும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் என்ற திட்டத்தின் மூலமும், மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் மூலமும் மாதந்தோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், மாணவர்களுக்கு காலை உணவுத்திட்டம் மற்றும் குறித்த நேரத்தில் பள்ளிக்குச் செல்ல பஸ் பாஸ் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறுத் திட்டங்கள் பள்ளிக்கல்வித்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.தமிழ்நாடு அரசால் வகுக்கப்பட்டுள்ள இத்தகைய திட்டங்களையெல்லாம் மாணவச் செல்வங்களாகிய நீங்கள் பயன்படுத்தி வளமார்ந்த சமுதாயத்தை உருவாக்க பாடுபட வேண்டும் எனத்தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் திரு.த.ஜான்சன் தேவசகாயம், அரசு அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply