சமூக வலைதள பயன்பாடு மற்றும் சைபர் குற்றங்களை தடுத்தல், நிதி மேலாண்மை, போட்டி தேர்வுகள் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி குறித்து நடைபெற்ற கல்லூரி மாணவிகளுக்கான கருத்தரங்கு நிகழ்ச்சி
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஸ்ரீ எஸ்.இராமசாமி நாயுடு ஞாபகர்த்தக் கல்லூரியில், மாவட்ட நிர்வாகம் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இணைந்து பாதுகாப்பான சமூக வலைதள பயன்பாடு மற்றும் சைபர் குற்றங்களை தடுத்தல், நிதி மேலாண்மை, போட்டி தேர்வுகள் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி குறித்து நடைபெற்ற கல்லூரி மாணவிகளுக்கான கருத்தரங்கு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் (03.02.2025) தொடங்கி வைத்தார்.
பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுடன் கூடிய அறிவுரை வழங்குதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும். குழந்தைகளாக இருக்கும் போது குடும்பம் மற்றும் சமூகத்தின் பார்வை வேறாக இருக்கும். ஆனால், 18 வயது முடிவடைந்த பின் சட்டத்தின் பார்வையிலும், சமூகத்தின் பார்வையிலும் ஒரு பொறுப்பு மிக்கவர்களாகிறீர்கள்.18 வயதிற்கு பிறகு கிடைக்கும் உரிமையோடு, அதனையொட்டி பொறுப்புகளும், கடமைகளும் நம்மிடம் வந்து சேரும். இன்று இருக்கக்கூடிய சூழ்நிலையில் முகநூல், இணையதளங்களில் இருக்கக்கூடிய வாய்ப்புகள் பற்றி நாம் தெரிந்து கொள்வதை விட அதிகமாக நமது நேரத்தை வீணடிக்கின்றோம்.
மிக முக்கியமான வயதை எட்டக்கூடிய பருவம் இந்த கல்லூரி பருவம். நீங்கள் இதற்கு முன்பாக சட்டத்தினுடைய பார்வையில் ஒரு சிறுமி. 18 -வயதிற்கு பிறகு நீங்கள் சமுதாயத்தில் ஒரு பொறுப்புள்ள குடிமகன். 18 வயதில் தான் நீங்கள் உங்கள் வாழ்க்கையை துணையை முடிவு செய்வதற்கான குறைந்தபட்ச வயதாகும். மிகப்பெரிய சட்டத்திற்கு எதிரான தவறை செய்துவிட்டால் கூட உங்களுக்கான தண்டனைகளோ அல்லது உங்களுக்கான சீர்திருத்த முறைகளோ முற்றிலும் வேறுபட்டது. ஒரு 18 வயது அடைந்தவுடன் உங்களுக்கான உரிமைகள் வந்து விடுகிறது என்பதை விட மிக முக்கியமாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது உங்களுக்கான கடமைகள் மற்றும் பொறுப்புணர்வுகள் அதிகமாக இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு இருசக்கர, நான்கு சக்கர வாகனத்தை ஓட்டுவதற்குரிய ஓட்டுன உரிமைத்தையும் பெறுவதற்கான வயது இந்த வயதுதான். நீங்கள் அடுத்தவர்கள் பாதுகாப்பை முதன்மையாக கொண்டும், உங்களின் உடைய பாதுகாப்பையும் ஒரு வாகனத்தை பொறுப்புடன் இயக்குவீர்கள் என்ற முதிர்ச்சியின் அடிப்படையில் உங்களுக்கு வாகனம் உரிமம் வழங்கப்படுகிறது என்பதை விட மிக முக்கியமாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது உங்களுக்கான கடமைகள் மற்றும் பொறுப்புணர்வுகள் அதிகமாக இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.எவ்வளவு உயரத்தில் ஒரு பொருள் இருக்கிறதோ அவ்வளவு உயரத்திற்கு நீங்கள் செல்ல வேண்டும். அப்பொழுது தான் அந்த பொருள் நமக்கு கிடைக்கும் என்பதை போல உங்களின் உடைய தேவையும், விருப்பமும் எந்த உயரத்தில் இருக்க வேண்டுமோ அந்த அளவிற்கு நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் எது ஒன்று கஷ்டம் என்று நினைக்கிறீர்களோ அதை யாராவது ஒருவர் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
எனவே, இந்த பருவத்தில் அது குறித்து நீங்கள் சிந்தித்து கொண்டே இருக்க வேண்டும். உயர்வான நம்பிக்கை எப்பொழுதும் கொண்டிருக்க வேண்டும். தாழ்வு மனப்பான்மை என்பது உங்களுக்கு நீங்கள் ஏற்படுத்தி கொண்ட வளையம். அதனை போக்கி கொள்ள வேண்டும். உங்களை விட திறமையும், உழைப்பும் குறைவாக உள்ளவர்களுக்கு வாய்ப்பை நீங்கள் கொடுத்து விடுகிறீர்கள். உங்களின் உடைய தொடர்ச்சியான முயற்சியால் எல்லாவற்றையும் மாற்ற முடியும்.ஒரு சமூக அறிவியல் தத்துவத்தை நமது இலக்கியங்கள் வலியுறுத்துகின்றன. எந்த ஒன்றையும் சமூக பார்வையோடு, சமூக அரசியல் பொருளாதாரத்தோடு, தத்துவங்களோடு இணைந்து பார்க்க வேண்டும் என்று பல நூற்றாண்டுகள் கடந்த இலக்கியத்திலும் நம்மால் பார்க்க இயலும்.
நல்லொழுக்கத்தை நாம் திரும்ப திரும்பக் கடைபிடித்தால் அது பழக்கமாகி விடும். அதுபோல தான் நீங்கள் தொடர்ச்சியாக பயிற்சிகளை மேற்கொண்டால் வெற்றி பெறலாம். அதனை மேம்படுத்துவதற்குரிய நாற்றாங்காலாக இந்த கல்லூரி வாழ்க்கை இருக்கும். உங்களது வெற்றி என்பது வானளவில் உயரத்தில் சிறகடித்து பறக்கக்கூடிய அளவில் இருக்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி ஷீலா சுந்தரி, கல்லூரி முதல்வர், கல்லூரி மாணவிகள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply