புளிச்ச கீரை உருளை மசாலா.
தேவையான பொருட்கள்-
புளிச்ச கீரை1 கட்டு, உருளைக்கிழங்கு 3, வெங்காயம் 1,தக்காளி 2, இஞ்சி பூண்டு விழுது 1
டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் 2, மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன், உப்பு தேவைக்கு, பட்டை 1,
எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன், சீரகம் அரை டீஸ்பூன்.
செய்முறை:
கீரையைச் சுத்தம் செய்து நறுக்குங்கள். கிழங்கை தோல் நீக்கி, சிறு சிறு சதுரத் துண்டுகளாக
நறுக்குங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைச் சூடாக்கி
வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்குங்கள். பிறகு தக்காளி, இஞ்சி பூண்டு விழுது,
மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள். பிறகு கிழங்கை சேர்த்துக் கிளறி,
ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றுங்கள். அதன் மேல் கீரையைப் பரவலாகத் தூவி, மூடி வையுங்கள்.
தீ மிதமாக இருக்க வேண்டும். பத்து நிமிடத்திற்குப் பிறகு கீரையை மட்டும் மேலாக எடுத்து
கடைந்து, மீண்டும் அதை கிழங்குக் கலவையில் சேருங்கள். எண்ணெயைக் காயவைத்து
பட்டை, சீரகம் தாளித்து கீரைக் கலவையில் சேர்த்துக் கிளறி இறக்குங்கள். சாதம்
சப்பாத்தியுடன் பரிமாறுங்கள். இதே மசாலாவை புளிச்ச கீரைக்குப் பதிலாக அரைக்கீரை
சேர்த்தும் செய்யலாம்.
0
Leave a Reply