கீரை பக்கோடா
தேவையான பொருட்கள் :-
கடலைப் பருப்பு ஒன்றரை கப், அரைக் கீரை1 கட்டு, புதினா1 கைப்பிடி. கறிவேப்பிலை, மல்லித்தழை தலா ஒரு கைப்பிடி ,மிளகாய் வற்றல்2, பச்சை மிளகாய்2, சோம்பு1 டீஸ்பூன், இஞ்சி1 துண்டு, பூண்டு5 பல், எண்ணெய் பொரிக்கத் தேவையான அளவு, உப்பு தேவைக்கு.
செய்முறை: -
கடலைப் பருப்பை இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து பச்சை மிளகாய், மிளகாய் வற்றல், இஞ்சி, பூண்டு,சோம்பு ஆகியவற்றைச் சேர்த்து கரகரப்பாக அரைத்தெடுங்கள். அரைக் கீரை, மல்லி, புதினா, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சுத்தம் செய்து பொடியாக நறுக்குங்கள். அரைத்த விழுதுடன் உப்பு, கீரை வகைகளைச் சேர்த்துப் பிசையுங்கள். சிறிது சிறிதாக எடுத்து சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள்.சுடச்சுட சாப்பிட சுவையாக இருக்கும். தக்காளி சாஸ் தொட்டுக்கொண்டால் சுவை கூடும்.அரைக்கீரைதான் என்றில்லை, பொன்னாங்கண்ணி கீரை, முருங்கைக் கீரை, முளைக்கீரை, சிறு கீரை போன்றவற்றைச் சேர்த்தும் செய்யலாம்.
0
Leave a Reply