கீரை ஸ்பெஷல் சூப் .
தேவையான பொருட்கள் :-
முருங்கைக்கீரை 1 கைப்பிடி, சிறு கீரை, அரைக்கீரை அல்லது முளைக்கீரை தலா ஒரு கைப்பிடி, பெரிய வெங்காயம் 1, தக்காளி 1, பச்சை மிளகாய்1, பூண்டு2 பல், சிறு துண்டு இஞ்சி1, மிளகு, சீரகம் தலா கால் டீஸ்பூன், சோம்பு ஒரு சிட்டிகை, புதினா,மல்லி, கறிவேப்பிலை (கலவை) ஒரு கைப்பிடி, மஞ்சள்தூள் 1 சிட்டிகை, உப்பு தேவைக்கு, தேங்காய்ப்பால் (விரும்பினால்) கால் கப்.
செய்முறை: -
தேங்காய்ப்பால் தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகப் போட்டு மூன்று கப் தண்ணீர் ஊற்றி வேக வையுங்கள்.ஆவி போனதும் திறந்து, ஆறவைத்து நைஸாக அரைத்தெடுங்கள். வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்து ஒரு கொதி விட்டு இறக்குங்கள்.தேங்காய்ப்பால் சேர்த்து பரிமாறுங்கள்.எந்தக் கீரையைச் சேர்த்தும் இந்த சூப்பை செய்யலாம்.
0
Leave a Reply