மலேஷியா நடந்த 19 வயதுக்கு உட்பட்ட T20 கிரிக்கெட் மற்றும் கோகோ போட்டிகள்
மலேசியாவில் நடந்த 19 வயதுக்கு உட்பட்ட பெண்கள் 'டி-20' உலக கோப்பையை இந்திய அணி வென்றது. இதில் இடம் பெற்றிருந்த தமிழக வீராங்கனை கமலினி (143 ரன், 2 கேட்ச்,4 ஸ்டம்பிங்) சிறப்பாக விளையாடினார்.டில்லியில் நடந்த கோ- கோ உலக கோப்பையை இந்திய ஆண்கள் அணி வென்றது. இதில் இடம்பெற்றிருந்த தமிழக வீரர் சுப்ரமணி சிறப்பாக விளையாடினார்.கமலினியை ஊக்கப்படுத்தும் வகையில், 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அவரது பெற்றோரிடம் முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார். சுப்ரமணிக்கும் ரூ. 25 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.
0
Leave a Reply