தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், விருதுநகர் மண்டலத்தில் நடப்பு 2025-2026 சம்பா பருவத்தில்நெல் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகவல்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், விருதுநகர் மண்டலத்தில் நடப்பு கே.எம்.எஸ் 2025-2026 சம்பா பருவத்தில் விவசாயிகளின் நலன் கருதி, இதுவரை 34 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2545/- மற்றும் பொதுரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2500/-க்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. 04.03.2026 வரை 29,796 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டு 3560 விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.71,01,20,229/-ஐ (ரூபாய் எழுபத்தொரு கோடியே ஒரு வட்சத்து இருபதாயிரத்து இருநூற்று இருபத்தொன்பது மட்டும்) வரவு வைக்கப்பட்டுள்ளன.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் தாலுகா, கம்மாப்பட்டி மற்றும் வத்திராயிருப்பு தாலுகா சுந்தரபாண்டியம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கழக விதிகளின்படி சராசரியாக விவசாயிகளிடமிருந்து நாள் ஒன்றுக்கு 1000 நெல் மூட்டைகள் முன்னுரிமை அடிப்படையில் கொள்முதல் செய்யப்பட்டு இயக்கம் செய்யப்பட்டு வருகிறது.
விவசாயிகள் அறுவடை செய்த நெல்லியை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து பயனடைந்து வருகின்றனர். பயனடைந்த விவசாயிகள் அரசுக்கும் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றிகளை தெரிவித்து வருகின்றனர்.
0
Leave a Reply