மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்து தற்போது IIT, NIT போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய 6 மாணவர்களுக்கு மடிக்கணினிகளை அறக்கட்டளைத் தலைவர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்(02.11.2024) மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்து தற்போது IIT, NIT போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் கல்லூரி கல்வி செயல்பாடுக்கான கோரிக்கையை ஏற்று விருதுநகர் மாவட்ட கல்வி அறக்கட்டளையின் மூலமாக 6 மாணவர்களுக்கு மடிக்கணினிகளை அறக்கட்டளைத் தலைவர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் வழங்கினார்.
விருதுநகர் மாவட்டத்தில், தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக, பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள், அவர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக கோடைகால சிறப்பு பயிற்சி வகுப்புகள், போட்டித்தேர்வுகளுக்கு தயார் படுத்துவதற்காக சிறப்பு பயிற்சி வகுப்புகள், உயர்கல்வி குறித்த புரிதல் மற்றும் உயர்கல்வி படிப்புகளில் உள்ள துறைகள் குறித்து வழிகாட்டும் நோக்கில் கல்லூரிகளுக்கு கல்விச் சுற்றுலா, உயர்கல்வி படிப்பதற்கு விரிவான வழிகாட்டுதலையும், அவர்களின் எதிர்கால கல்வி நோக்கங்கள் குறித்து தகவல் அறிந்து முடிவுகளை எடுக்க மாணவர்களுக்கு உதவிடும் வகையிலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், சுற்றுச்சூழல் மற்றும் வன உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி பசுமை ஆர்வலர்களை உருவாக்கும் திட்டம், மாணவர்களுக்கு கல்வியோடு, அவர்களின் கல்வி இணை செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அறிவோம் தெளிவோம் என்ற சிறப்புத் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்கள் அருகில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு சென்று, அங்குள்ள அலுவலக நடைமுறைகளையும், அங்கு வழங்கப்படும் சேவைகளையும் தெரிந்து கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடர்ச்சியாக காபி வித் கலெக்டர் நிகழ்ச்சிகள் மூலம் பல்வேறு தனித்திறமைகளில் சிறந்து விளங்கும் அரசுப்பள்ளி மாணவர்களை சந்தித்தும், அரசுப்பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுடன் கலந்துரையாடி, இலக்கை நிர்ணயிப்பது, அந்த இலக்கை எவ்வாறு அடைவது, வாய்ப்புகளை பயன்படுத்துவது, தொடர்ச்சியான செயல்பாட்டினால் திறமையை வளர்த்துக் கொண்டு வாழ்வில் வெற்றி பெறுவது, தவறுகளில் இருந்து படிப்பினை கற்றுக் கொண்டு எவ்வாறு வாழ்வில் முன்னேறுவது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை கூறி, அறிவுரை மற்றும் ஆலோசனைகளுடன் கூடிய உரிய வழிகாட்டுதல்களை மாணவர்களுக்கு வழங்கி வருகிறார்கள்.
மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள்/மாணவிகளுக்கு நல்ல திறமை மற்றும் கல்வியில் ஆர்வம் இருந்தும் பொருளாதார அடிப்படையில் வசதி குறைவு மற்றும் குடும்ப சூழ்நிலைகள் காரணமாக தங்களுடைய கல்வியினை தொடர முடியாமல் இருக்கும் மாணவர்களுக்கு உதவிடும் வகையில், “விருதுநகர் மாவட்டக் கல்வி அறக்கட்டளை” மூலம் உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, இராஜபாளையம் சுந்தரராஜபுரம் ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் பயின்று, தற்போது சென்னை ஐ.ஐ.டி- யில் B.Tech Aerospace கல்வி பயிலும் மாணவன் திரு. சி.பார்த்தசாரதி என்பவர்,மல்லாங்கினர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று, தற்போது காஞ்சிபுரம் Indian institute of information technology, design and manufacturing, (iiitdm ) கல்லூரியில் - B-Tech Mechanical Engineering பயிலும் மாணவி டி.பாண்டிச்செல்வி என்பவருக்கும், திருத்தங்கல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று, தற்போது திருச்சி என்.ஐ.டி - யில் B-Tech Chemical Engineering பயின்று வரும் மாணவன் குகன் என்பவருக்கும்,இராஜபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று, தற்போது திருச்சி என்.ஐ.டி - யில் B-Tech Production Engineering பயின்று வரும் மாணவி ஆர்த்தி என்பவருக்கும், விருதுநகர் அரசு மாதிரி பள்ளியில் பயின்று தற்போது எப்.டி.டி.ஐ - யில் (Footwear Design and Development Institute (FDDI Chennai)) Bachelor of Design பயிலும் மாணவன் முகம்மது அஜ்மல் என்பவருக்கும், விஸ்வநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று, தற்போது கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆப்டெனாலஜியில் B.E(CSC)பயின்று வரும் மாணவி மகேஸ்வரி மாணவருக்கும்என மொத்தம் 6 மாணவர்களுக்கு மடிக்கணினிகளை அறக்கட்டளைத் தலைவர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
0
Leave a Reply