அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளி குழந்தைகளுக்கான மாவட்ட அளவிலான பல்வேறு திறன் போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (07.12.2024) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, ராம்கோ சிமெண்ட்ஸ்(Ramco cements) மற்றும் பம்பிள் பி டிரஸ்ட்(BumbleB Trust) இணைந்து செயல்படுத்திய கல்வி- 40 திட்டத்தின் மூலம் அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளி குழந்தைகளுக்கான பல்வேறு திறன் போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தொடங்கி வைத்தார்.
அதன்படி, அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளி குழந்தைகளுக்கு முழுமையான நம்பிக்கையை வழங்குவதற்கும், அவர்களின் அடிப்படையான ஆங்கில வாசிப்பு, எழுதுதல் மற்றும் பேசும் திறன்களை வளர்ப்பதற்கும், பல்வேறு சுவாரஸ்யமான போட்டிகள் வடிவமைக்கப்பட்டு பள்ளி அளவில், மண்டல அளவில் நடத்தப்பட்டு, இன்று மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்பட்டன. கதைசொல்லல், கையெழுத்து, எழுத்துப்பிழை, உரையாடல், வினாடி வினா, எழுத்துப்பிழை பொருத்துதல், ஊமை வேடங்கள் என பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டன.
இந்த ஆண்டு, 14 பள்ளிகளைச் சேர்ந்த 360 அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளி மாணவர்கள் பள்ளி அளவில் பங்கேற்று, பின்னர் 181 மாணவர்கள் 5 வெவ்வேறு தொகுதிகளில் போட்டியிட்டனர். மாவட்ட அளவில் 112 மாணவர்கள் போட்டியிட்டு, ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திரு.ரமேஷ், ராம்கோ சிமெண்ட்ஸ் துணைத்தலைவர்கள் திரு.லட்சுமணன், திரு.ராஜகோபால், ராம்கோ சிமெண்ட்ஸ் மக்கள் தொடர்பு அலுவலர் திரு.முருகேசன், பம்பிள் பிடிரஸ்ட் கல்வி40 நிறுவனர் திரு.பிரேம் குமார் உட்பட ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply