மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 03.11.2024 அன்று திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம், திருவில்லிபுத்தூர் வனச்சரக எல்கைக்கு உட்பட்ட பகுதியில் மலையேற்றத் திட்டத்தை நடைமுறைப் படுத்த உள்ளார்
விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் முனவைர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் 03.11.2024 அன்று திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம், திருவில்லிபுத்தூர் வனச்சரக எல்கைக்கு உட்பட்ட பகுதியில் மலையேற்றத் திட்டத்தை நடைமுறைப் படுத்த உள்ளார்.தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் கடந்த 24.10.2024 அன்று தலைமை செயலகத்தில் தமிழ்நாட்டில் உள்ள 40 அழகிய மலையேற்ற வழித்தடங்களை உள்ளடக்கிய தமிழ்நாடு மலையேற்றத் திட்டத்தினை தொடங்கி வைத்தார். மேலும் இத்திட்டத்தின் இலச்சினையினை வெளியிட்டு, இணையவழி முன்பதிவிற்காக (www.trektamilnadu.com) என்ற வலைதளத்தை துவங்கி வைத்தார்.
இத்திட்டம் தமிழ்நாட்டின் வனம் மற்றும் வன உயிரினப் பகுதிகளில் நிலையான முறையில் மலையேற்றம் மேற்கொள்வதை ஒரு நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு வன அனுபவக் கழகம் மற்றும் தமிழ்நாடு வனத்துறையின் கூட்டு முன்னெடுப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.
இயற்கை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தவும் வனப்பகுதியை ஒட்டியுள்ள உள்ளூர் மக்களுக்கு நிலையான வாழ்வாதாரத்தை ஏற்படுத்தவும், வனம் மற்றும் வன உயிரின பாதுகாப்பிற்கு வலுசேர்க்கும் விதமாக இந்த 'தமிழ்நாடு மலையேற்றத் திட்டம்' வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து 01.11.2024 ஆம் தேதி முதல் இணைய வழியில் முன்பதிவு நடைபெற்று வருகிறது. தற்போது மலையேற்ற திட்டம் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகளில் நடைபெறும்.
அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (03.11.2024) அன்று காலை 7 மணியளவில் திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம், திருவில்லிபுத்தூர் வனச்சரக எல்கைக்கு உட்பட்ட செண்பகத்தோப்பு முதல் வ.புதுப்பட்டி வரை 9 கி.மீ தூரம் உள்ள மலையேற்ற திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளார். மேற்படி நிகழ்வில் பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம் என துணை இயக்குநர்(மேகமலை புலிகள் காப்பகம், திருவில்லிபுத்தூர) திரு.ப.தேவராஜ்,இ.வ.ப.,அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply