25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் பொன்னகரம் சந்தன மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா >> ராஜபாளையத்தில் அரசு ஆஸ்பத்திரி புதியகட்டிடம் திறப்பு விழா . >> தைப்பூச திருவிழா முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு >> மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் முனைவோர் பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா >> ராஜபாளையம் மட்டுமின்றி சுற்றியுள்ள  நகரங்கள் ,கிராமங்களில் நேற்றிரவு 9 :08 மணிக்கு 3 ரிக்டர் அளவுக்கு லேசான நிலநடுக்கம் . >> ராம்கோ இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி கருத்தரங்கில் குழந்தை திருமணத்தைத் தடுக்க சமூக வலைதளங்களை கருவியாக பயன்படுத்த வேண்டும் – சமூக ஆர்வலர்கள் கோரிக்கை. >> சாலை விரிவாக்க ஆக்கிரமிப்பு அகற்றுவதில், முறையாக அளவீடு செய்யாமல் பணிகள் நடப்பதாக  விவசாயிகள் குற்றச்சாட்டு . >> சேத்தூர் அடுத்த கோவிலுாரில் அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. >> தென்னையை தாக்கும் சாறு உறிஞ்சி பூச்சிகளான ரூகோஸ் வெள்ளை ஈக்கள் . >> ராம்கோ குரூப் டெக்ஸ்டைல் டிவிசன் ராஜபாளையம் மில்ஸ் லிமிடெட் இராஜபாளையம் 56-வது பொங்கல் விளையாட்டு விழா-2026 >>


சிவகாசி திருத்தங்கலில்  புதிய இரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு,  அமைச்சர் அவர்கள்  அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சிவகாசி திருத்தங்கலில் புதிய இரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு,  அமைச்சர் அவர்கள்  அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி திருத்தங்கலில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை(இரயில்வே திட்டப்பணிகள்) சார்பில், ரூ.45.60 கோடி மதிப்பில் புதிய இரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி அவர்கள் தலைமையில்,  சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.அசோகன் அவர்கள் மற்றும்  சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள்  ஆகியோர் முன்னிலையில்,  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள்  (18.01.2026) அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.நீண்ட கால திட்டமாக இருந்தாலும், சமூக நலத் திட்டமாக இருந்தாலும் அதனை செவ்வனே நிறைவேற்றக் கூடிய அரசு தான் நம்முடைய  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு.விருதுநகர் மாவட்டத்திலே கேந்திரமாக அமைந்திருக்கக்கூடிய இந்த சிவகாசி மாநகராட்சியின் வளர்ச்சி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான ஒன்று என்று கருதி, விருதுநகர் மாவட்டத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு  சிவகாசி மாநகராட்சிக்கு திட்டப் பணிகள் அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் நம்முடைய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அதை நிறைவேற்றியுள்ளார்.

          சிவகாசியின் நீண்ட கால கனவினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நிறைவேற்றியுள்ளார்.  மேலும், செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த காலத்தில் முடிக்கப்படுமா என்ற ஐயத்தை முறித்து குறித்த காலத்திற்கு முன்னரே முடித்த அரசு.அதுபோன்று, தான் இந்த சிவகாசி- திருத்தங்கல் மேம்பாட்டு பணிகளுக்கு ரூ. 45.6 கோடி ஒதுக்கப்பட்டு, அதற்கான நிர்வாக அனுமதி பெறப்பட்டு, உடனடியாக அப்பணிகளை தொடங்குவதற்கு அடிக்கல் நாட்டும் பணிகளை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். உள்கட்டமைப்பை செயல்படுத்துவதில் இந்த அரசு ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறது. சிவகாசியும், திருத்தங்கலும் மறுமலர்ச்சியினை பெறுகிறது. மக்கள் நீண்ட காலமாக கேட்டு கொண்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றி கொண்டுள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்.திருத்தங்கல் கடவு எண் 424-ல் உள்ள பாதை இரயில் போக்குவரத்திற்காக அடிக்கடி மூடப்படுவதால், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. மேலும் இப்பகுதி பல தொழிற்சாலைகள், பள்ளிகள், கல்லூரிகள் இயக்கும் இடமாக இருப்பதால், தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் மிகுந்த சிரமம் அடைகிறார்கள்.

இதனை கருத்தில் கொண்டு, இன்று திருவில்லிபுத்தூர் - சிவகாசி - விருதுநகர் -அருப்புக்கோட்டை - திருச்சுழி - நரிக்குடி - பார்த்திபனூர் சாலை 23/6-ல் கடவு எண்.424-க்கு மாற்றாக  சிவகாசி மற்றும் திருத்தங்கல் இரயில் நிலையங்களுக்கு இடையில் சுமார் ரூ.45.60 கோடி மதிப்பீட்டில் புதிதாக மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.இந்த திட்டமிடப்பட்டுள்ள சாலை மேம்பால பணியானது ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி-விருதுநகர் -அருப்புக்கோட்டை திருச்சுழி - நரிக்குடி பார்த்திபனூர் சாலை (மாநில நெடுஞ்சாலை 42) கி.மீ 23/6ல் அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் நிலையில் ஆலமலத்துப்பட்டி, செங்கமலநாச்சியார்புரம், புதுப்பட்டி, ஜமீன்சல்பட்டி நாரணபுரம், கீழ் திருத்தங்கல் செங்கமலப்பட்டி சுக்கிரவார்பட்டி மற்றும் அதிவீரன்பட்டி கிராம மக்கள் பயனடைவார்கள்.

இந்த புதிய பாலமானது 8.5 மீ அகலத்தில் 15 தூண்களுடன் 804 மீ நீளத்தில் அமைக்கப்படவுள்ளது. பாலம் மொத்த  804 மீ நீளத்துடன், பாலத்தின் கண் 18.6மீ( 15 எண்ணம்), 13.6மீ (2 எண்ணம்), 17 ஓடுதளத்துடன், பயனுறு சாலையின் அகலம் 5.50 மீ நீளத்துடனும், 1216 மீ நீளத்திற்கு வடிகால் மற்றும் 2 குறும்பாலங்கள் அமைக்கும் பணியை உள்ளடக்கியுள்ளது.மேம்பாலம் மற்றும் பயனுறு சாலை அமைக்கும் பணிக்கு திருத்தங்கல் கிராமத்தில் 2489.5 ச.மீ மற்றும் கீழத்திருத்தங்கல் கிராமத்தில் 4170 ச.மீ என மொத்தம் 6659.5 ச.மீ நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.எனவே, இந்த பகுதியில் இடையூறு இல்லாமல் போக்குவரத்தை தடையின்றி மேம்படுத்துவதற்கு இந்த இரயில்வே மேம்பாலம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும்.

சுமார் 1 கோடியே 31 லட்சம் மகளிருக்கு மகளிர் உரிமைத்தொகை, மகளிர் விடியல் பயணம், குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம், கல்லூரி மாணவர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை, மடிக்கணினி உள்ளிட்ட சமூக நலன் திட்டங்கள், அதே நேரத்தில் எதிர் காலத்தினை வடிவமைக்கும் வகையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி தருகின்ற ஒரு அரசு தான் இந்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு.இம்மேலான, திட்டங்களுக்கு தாங்கள் அனைவரும் ஒத்துழைப்பை தர வேண்டும்  எனத் தெரிவித்தார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News