25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் பொன்னகரம் சந்தன மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா >> ராஜபாளையத்தில் அரசு ஆஸ்பத்திரி புதியகட்டிடம் திறப்பு விழா . >> தைப்பூச திருவிழா முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு >> மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் முனைவோர் பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா >> ராஜபாளையம் மட்டுமின்றி சுற்றியுள்ள  நகரங்கள் ,கிராமங்களில் நேற்றிரவு 9 :08 மணிக்கு 3 ரிக்டர் அளவுக்கு லேசான நிலநடுக்கம் . >> ராம்கோ இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி கருத்தரங்கில் குழந்தை திருமணத்தைத் தடுக்க சமூக வலைதளங்களை கருவியாக பயன்படுத்த வேண்டும் – சமூக ஆர்வலர்கள் கோரிக்கை. >> சாலை விரிவாக்க ஆக்கிரமிப்பு அகற்றுவதில், முறையாக அளவீடு செய்யாமல் பணிகள் நடப்பதாக  விவசாயிகள் குற்றச்சாட்டு . >> சேத்தூர் அடுத்த கோவிலுாரில் அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. >> தென்னையை தாக்கும் சாறு உறிஞ்சி பூச்சிகளான ரூகோஸ் வெள்ளை ஈக்கள் . >> ராம்கோ குரூப் டெக்ஸ்டைல் டிவிசன் ராஜபாளையம் மில்ஸ் லிமிடெட் இராஜபாளையம் 56-வது பொங்கல் விளையாட்டு விழா-2026 >>


சிவகாசி நகருக்கான  இரண்டாம் கட்ட வெளி வட்டச்சாலை அமைக்கும் பணிகளுக்கு   அமைச்சர்   அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சிவகாசி நகருக்கான  இரண்டாம் கட்ட வெளி வட்டச்சாலை அமைக்கும் பணிகளுக்கு  அமைச்சர்   அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி சித்துராஜபுரம் கொங்கலாபுரத்தில்   (18.01.2026) நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில்,  ரூ.58.50 கோடி மதிப்பில்விஸ்வநத்தம் – வெங்கடாசலபுரம் சாலை, சாத்தூர் - சிவகாசி – கழுகுமலை சாலை மற்றும் சிவகாசி – ஆலங்குளம் ஆகிய சாலைகளை இணைக்கும்  சிவகாசி நகருக்கான  வெளி வட்டச்சாலை அமைக்கும் பணிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி அவர்கள் தலைமையில், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.அசோகன் அவர்கள் மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள்  ஆகியோர் முன்னிலையில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு  அவர்கள்  அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சாலை வசதிகளை மேம்படுத்துவதற்காவும், விரிவுபடுத்துவதற்காவும், சாலை பாதுகாப்பினை உறுதிபடுத்துவதற்கும் பல்வேறு திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார்கள்.நம்முடைய விருதுநகர் மாவட்டத்தின் உடைய மையப் பகுதியில் இருக்கக்கூடிய இந்த சிவகாசி மாநகராட்சிக்கு ஒரு சுற்று வட்டச் சாலை அமைப்பது தான் நீண்ட காலமாக இங்கே இருக்கக்கூடிய இந்த போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்கும், பொது மக்கள் மிக சரியான வகையிலே இந்த மாநகராட்சிக்கு உள்ளே வந்து செல்வது என்பது எளிதாக ஒன்றாக அமைய வேண்டும் என்பதற்காக தான் நம்முடைய  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு திட்டங்களை தீட்டியுள்ளார்.குறிப்பாக, இன்றைக்கு அடிக்கல் நாட்டபட்டுள்ள திருத்தங்கல் ரயில்வே மேம்பாலம், ஏற்கனவே, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ள சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம் இவையனைத்தும் சிவகாசி மாநகராட்சியின் வளர்ச்சிக்கு மிக குறிப்பிடத் தகுந்த பணிகளாகும்.

 இந்த சுற்றுச்சாலை சிவகாசி மாநகராட்சிக்கு மிக மிக முக்கியமான ஒன்றாக கருதப்பட்டு இந்த சுற்று வட்டார சாலை மூன்று கட்டங்களாக இன்றைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றது.இன்றைக்கு  ஏறத்தாழ ரூ. 58 கோடி  செலவில் இந்த இரண்டாம் கட்ட பணிகளுக்கு நாம் அடிக்கல் நாட்டி இருக்கின்றோம். அதனடிப்படையில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில்,  ரூ.58.50 கோடி மதிப்பில் விஸ்வநத்தம் – வெங்கடாசலபுரம் சாலை, சாத்தூர் - சிவகாசி – கழுகுமலை சாலை  மற்றும் சிவகாசி – ஆலங்குளம் ஆகிய சாலைகளை   சிவகாசி நகருக்கான  வெளி வட்டச்சாலை அமைக்கும் பணிகளுக்கு    இன்று  அடிக்கல் நாட்டி பணிகள் துவக்கி வைக்கப்பட்டது.

          முதற்கட்ட பணிகளில் பெருமளவில் நடைபெற்று ஏறத்தாழ ரூபாய் 120 கோடி  அளவில் எடுத்துக் கொள்ளப்பட்டு, 56 சிறு பாலங்களில் 50 பாலங்கள் நிறைவு பெற்று, அப்பணிகள் முழுமையாக நிறைவு பெறக் கூடிய நிலையில் இருக்கிறது.சிவகாசி வெளிப்புற சுற்றுச்சாலை அமையவுள்ள சாலையின் மொத்த நீளம் 33.520 கி.மீ ஆகும். இதனால் திருவில்லிபுத்தூர் - சிவகாசி சாலை, விருதுநகர் -சிவகாசி சாலை, சாத்தூர்-சிவகாசி - கழுகுமலை சாலை, சிவகாசி - ஆலங்குளம் சாலை, சிவகாசி - எரிச்சநத்தம் சாலை, சிவகாசி - கன்னிசேரி சாலை மற்றும் விஸ்வநத்தம்- வெங்கடாசலபுரம் சாலை உள்ளிட்டவை சுற்றாக இணைக்கப்படும்.

          இதில் கீழத்திருத்தங்கல், ஆனையூர் என இரு பகுதிகளில் இரயில் தண்டவாளங்கள் செல்வதால் மேற்படி இடங்களில் இரயில்வே மேம்பாலம் அமைக்க இரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.நில எடுப்பு பணிகளில்  தொழிற்சாலைகள் மற்றும் அதிகமான குடியிருப்பு பகுதிகள் பாதிக்கப்படுவதை தவிர்க்கும் பொருட்டு  33.481 கிமீ நீளத்திற்கு 147.00 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த  நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டு நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.இத்திட்டப்பணியானது, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் அவர்களால் 2024-25 நிதி நிலை அறிக்கை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டு, முதல் கட்டமாக கி.மீ.23/6 முதல் 32/520 வரை ஈஞ்சார் விலக்கு, வடபட்டி முதல் சுக்கிரவார்பட்டி வரை 9.92 கி.மீ. நீளத்திற்கு  பணி நடைபெற்று வருகிறது.

இரண்டாம் கட்டமாக கி.மீ. 12/500 முதல் 19/200 வரை 6.7 கி.மீ. தூரத்திற்கு ரூ.58.50 கோடி மதிப்பீட்டில் இன்று பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.சிவகாசி வெளி வட்டச்சாலை முடிவடையும் சமயத்தில் சிவகாசி நகரை சுற்றியுள்ள 20 க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் பெரிதும் பயனடைவார்கள்  என மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.சிவகாசியின் வளர்ச்சி என்பது விருதுநகர் மாவட்டத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் குறியீடாக அமைகிறது.  அந்த வகையில் என்றைக்கும்  பொதுமக்களின் உடைய வளர்ச்சியில் அக்கறை கொண்டிருக்கக் கூடிய  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நாம் என்றும் நன்றியோடு இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், நெடுஞ்சாலைத்துறை திருநெல்வேலி கோட்ட பொறியாளர் திரு.லிங்குசாமி(திட்டங்கள்), கோவில்பட்டி உதவி கோட்டப் பொறியாளர் திருமதி உமாதேவி,  கோட்டப்பொறியாளர் (க&ப, விருதுநகர்) திருமதி பாக்கியலட்சுமி, சாத்தூர் கோட்டாட்சியர் திரு. கனகராஜ், சிவகாசி வட்டாட்சியர் திரு.இலட்சம், சிவகாசி மாநகராட்சி துணை மேயர் திருமதி விக்னேஷ் பிரியா, முன்னாள் சிவகாசி ஊராட்சி ஒன்றியக் குழு துணைத்தலைவர் திரு.விவேகன் ராஜ், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News