செங்குளம் கண்மாயில் பிளாஸ்டிக், கட்டுமானக் கழிவுகள் அகற்றப்பட்டு, தூர்வாரப்பட்டு, சுற்றுசூழல் மறுசீரமைப்பு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதை அமைச்சர்அவர்கள் நேரில் சென்று ஆய்வு
விருதுநகர் மாவட்டம், திருத்தங்கலில் (07.12.2024) ஹட்சன் நிறுவனம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து, சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் திருத்தங்கல் செங்குளம் கண்மாயில் பிளாஸ்டிக், கட்டுமானக் கழிவுகள் அகற்றப்பட்டு, தூர்வாரப்பட்டு, சுற்றுசூழல் மறுசீரமைப்பு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தலைமையில், சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் முன்னிலையில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருத்தங்கல் செங்குளம் கண்மாய் மற்றும் கடமங்குளம் கண்மாய் ஆகிய நீர்நிலைகளில் ஹட்சன் நிறுவனத்தின் உடைய சமூக பொறுப்பு நிதியின் கீழ் நீர் நிலை தூர்வாரப்பட்டு சீரமைக்க கூடிய பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.செங்குளம் கண்மாய் கடந்த 50 ஆண்டுகளாக கழிவுநீர் தேங்கக்கூடிய ஒரு குப்பைகளை நிறைந்த இடமாகவும், பல்வேறு சுகாதார சீர்கேடுகளுக்கு உள்ளாகக் கூடியதாகவும் இருந்தது.அதன்படி, ஹட்சன் நிறுவனம், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஒத்துழைப்போடு இந்த பணிகள் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. நீர் நிலையை தூர்வாருதல் மட்டுமல்லாமல் நீண்ட காலமாக பயன்படுத்தக்கூடிய வகையில், எந்த வழியில் நீர் வர வேண்டும், வெளியேற வேண்டும் என்றும், கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு எவ்வாறு அதை நன்னீரோடு கலக்காமல் வெளியேற்றப்பட வேண்டும் என்பதற்காகவும் சிறந்த மிகப்பெரிய அளவில் திட்டமிட்டு இந்த பணிகள் நடைபெறுகிறது.
ஒரு மாபெரும் முயற்சியை இந்த திட்டம் உருவாக்கி இருக்கிறது.நம்முடைய பகுதிகளில் வர வேண்டிய இது போன்ற நல்ல திட்டங்களுக்கு இது ஒரு முன்மாதிரியான திட்டம்.இது போன்ற பணிகளை முன்னெடுத்து செய்யக்கூடியவர்களுக்கு தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும் அனைத்து வகையிலும் உறுதுணையாக இருக்கும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் ஹட்சன் நிறுவன உரிமையாளர் திரு.சந்திரமோகன், அரசு அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply