மகிழ மரத்தின் சிறப்பு
மகிழம் அல்லது வகுளம் என்ற பெயரில் அழைக்கப்படும் மகிழ மரம் சங்க இலக்கியத்தின் குறிஞ்சிப்பாட்டு, பரிபாடல், தினைமாலை நூற்றைம்பது ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள அரிய மரம் ஆகும்.
போதி மரத்தடியில் ஞானம் அடைந்த புத்தரோடு தொடர்புடைய 7 புனித மரங்களில் மகிழமும் ஒன்று.
பிராண வாயுவை அதிக அளவில் வெளிப்படுத்துவது. கரியமில வாயு என்னும் கார்பன் டை ஆக்சைடை நிலைப்படுத்தும் திறன் மற்றும் ஒளிச்சேர்க்கை திறன் போன்றவை மற்ற மரங்களை ஒப்பிடும்போது மகிழ மரத்திற்கு அதிகம்.
பகலில் இதன் நிழலில் அமர்ந்தால் அதிக அளவு ஆக்சிஜன் உடலுக்கு கிடைத்து, ரத்தத்தில் பிராண வாயு நன்றாக கலந்து உடலுக்கு புத்துணர்வு கொடுக்கும் என்று கண்டறியப்பட்டு உள்ளது.
சிவத்தலங்களில் இது பரவலாக வளர்க்கப்படுகிறது அதன் காரணமாக இதன் பூ 'சிவமல்லி' என்றும் அழைக்கப்படுகிறது. மார்ச் முதல் ஜூன் வரை பூக்கும். இதன் பூ அழகிய அமைப்புடையது, மங்கிய மஞ்சள் நிறம் கொண்டது. மலரில் அதிகத்தேன் காணப்படும்.
இதன் பூக்கள் வீழ்ந்து செவ்வந்தியோடு சேர்ந்து காய்ந்து கிடக்கும்போதுகூட இதன் தேனுக்காக வண்டுகள் மொய்த்தன என்று சங்கப்பாடல்கள் கூறுகின்றன.
பூவானது மகிழம் பழமாக மாறும்போது நல்ல வாசனை யாக சுவையாக இருக்கும். மகிழம் பழம் சாப்பிட்டால் ஒற்றை தலைவலி குறையும். தசைகளின் இறுக்கம் தளர்ந்து தலைவலி நீங்குவதோடு நல்ல தூக்கம் வரும். அத்துடன் மன அழுத்தம், மனச்சோர்வு போன்றவையும் நீங்கும் என்கின்றன மருத்துவ நூல்கள்.
0
Leave a Reply