பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர்கர்நாடகாவின் கலபுராகி நகரில் நடக்கிறது.
இந்தியாவின் வைஷ்ணவி, ரஷ்யாவின் நெபிலி ஒற்றையர் பிரிவு காலிறுதியில் மோதி, ஒரு மணி நேரம் 20 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் வைஷ்ணவி, 6-1, 6-3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.
இந்தியாவின் அன்கிதா ரெய்னா, ரஷ்யா வின் பர்டினாவை 6-0, 6-2 என்ற நேர் செட்டில் மற்றொரு காலிறுதியில் வென்றார்.
இந் தியாவின் அன்கிதா, வைஷ்ணவி ஜோடி, 7-6, 6-2 என, இந்தியாவின் சோனல், பெலா ஜோடியை பெண்கள் இரட்டையர் அரையிறுதியில் வென்றது. மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் சோஹா, ஆகான்ஷா ஜோடி, 6-7, 6-0, 10-5 என ஜப்பானின் ஒஜெகி, இந்தியாவின் ஷிவானி ஜோடியை வென்றது.
0
Leave a Reply