நச்சு கொட்டை கீரை பொரியல் .அரைக் கீரையிலும் செய்யலாம்.
தேவையான பொருட்கள்
நச்சு கொட்டை கீரை 15 இலைகள்,
பெரிய வெங்காயம் 1,
பூண்டு 8 பல்,
மிளகுத்தூள் 1 டீஸ்பூன்,
எண்ணெய 1 டேபிள் ஸ்பூன்,
உப்பு தேவைக்கு
செய்முறை:
கீரையைச் சுத்தம் செய்து, நடு நரம்பை நீக்கிவிட்டு, மிகவும் பொடியாக நறுக்குங்கள். பூண்டு,
வெங்காயத்தைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைச் சூடாக்கி, வெங்காயம், பூண்டு,
சிறிதளவு உப்பு சேர்த்து வதக்குங்கள். பின்னர் கீரை, உப்பு சேர்த்து, சிறு தீயில், மூடி போட்டு
நன்கு வேகும்வரை வதக்குங்கள். கடைசியில் மிளகுத்தூள் தூவி கிளறி இறக்குங்கள்.
சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும். இந்தப் பொரியலை, அரைக் கீரையிலும் செய்யலாம்.
0
Leave a Reply