வல்லாரை கீரை துவையல்.
தேவையான பொருட்கள்
வல்லாரைக் கீரை 1 கப், சின்னவெங்காயம் 1 கப், பூண்டு 8 பல், தக்காளி 3, புளி நெல்லிக்காய்
அளவு, உப்பு தேவைக்கு, கடுகு 1 டீஸ்பூன், உளுந்து 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 6, எண்ணெய் 2
டேபிள் ஸ்பூன்.
செய்முறை:
கீரையைச் சுத்தம் செய்து ,வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகு, உளுந்து தாளித்து,
மிளகாய் சேர்த்து, சிவக்க வறுத்தெடுங்கள். பிறகு வெங்காயம் ,பூண்டு சேர்த்து வதக்கி, பிறகு
கீரை சேர்த்து வதக்குங்கள். கடைசியில் புளி, உப்பு சேர்த்து கிளறி இறக்கி, ஆறியதும் நைஸாக
அரைத்தெடுங்கள்.இட்லி, தோசை, சாதத்துக்கு சேர்த்துக் கொண்டால் சுவை கூட்டும்.
0
Leave a Reply