25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


ஸ்னூக்கர் 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஸ்னூக்கர் 

  காமன் வெல்த் பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் தொடர் மொரிசியசில் முதன் முறையாக நடந்தது. பெண்களுக்கான பைனலில் (8 பந்து பிரிவு) இந்தி யாவின் வித்யா பிள்ளை, தென் ஆப்ரிக்காவின் மரினா ஜேக்கப்ஸ் மோதி னர் . துவக்கத்தில் சிறப்பாக செயல்பட்ட வித்யா,5-1 என முன்னிலை பெற்றார். இதன் பின் போட்டி 5-5 என சமன் ஆனது. வெற்றியாளரை முடிவு செய்ய 'ஷூட் அவுட்' நடந்தது. இதில் வித்யா 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கம் கைப்பற்றினார்.

இந்தியாவின் சித்ரா மகிமைராஜ், சிங்கப் பூரின் வீனஸ் லிம் ஜின்யி  மற்றொரு பைனலில் (10 பந்து) மோதினர். இப்போட்டி 5-5 என சமன் ஆனது. பின் நடந்த 'ஷூட் அவுட்டில்' சித்ரா 2-4 என தோல்வியடைந்து, வெள்ளி வென்றார். பெண்களுக்கான 6 பந்து பிரிவில் இந்தியாவின் அனுபமா, கீர்த்தனா அரையிறுதியில் தோல்வியடைந்து, வெண்கலம் பெற்றனர்.ஆண்களுக்கான ஸ்னுாக்கர் காலிறுதியில் இந்தியாவின் அனுபவ வீரர் பங்கஜ் அத்வானி, 2-3 என தோல்வியடைந்தார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News