25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >>


அழகுக் குறிப்பு

Apr 10, 2025

வயதானாலும் பளபளப்பான சருமத்தை பெற…

அனைத்து பெண்களுக்கும் தங்களது சருமத்தை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில்  ஆசை .ஆனால் நேரகுறைப்பாட்டால் அதை சீராக பராமரிக்க முடிவதில்லை. நீங்கள் வீட்டிலேயே செய்யக்கூடிய ஒரு சில Face Pack முகத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சினைக்கும் நன்மையை வழங்கும்.முட்டையின் வெள்ளைக்கருவை நுரை வரும் வரை அடித்துக்கொள்ளவும். அதை உங்கள் முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் அப்படியே விட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.ஓர் பழுத்த வாழைப்பழத்தை நன்றாக மசித்துக்கொள்ளவும். அதில் ஒருடீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவி20 நிமிடங்களுக்கு அப்படியே விடவும். பின்னர் சாதாரண தண்ணீரில் கழுவவும். வெள்ளரிக்காரய சிறிய துண்டுகளாக வெட்டி பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ளவும். பின் அதில் தயிர் சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடங்களுக்கு அப்படியே விடவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவினால் இறுக்கமான சருமம் கிடைக்கும். கற்றாழையை சிறிய துண்டுகளாக வெட்டி அதில் உள்ள ஜெல் மற்றும் வெட்டி எடுக்கவும். அதை முகத்தில் நேரடியாக தடவி 30 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு கழுவவும்.  ஓர் பழுத்த பப்பாளிப் பழத்தை மசித்து எடுத்து அதில் தேன் சேர்த்து முகத்தில் தடவவும்.20 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.  ரோஸ் வாட்டர் அல்லது தயிருடன் உளுத்தம்பருப்பு மாவை கலந்து எடுத்துக்கொள்ளவும். இதை முகத்தில் தடவி 20 நிமிடங்களுக்கு அப்படியே வைத்து ஸ்க்ரப் செய்யவும். பின்னர் தண்ணீரில் கழுவினால் பளபளப்பான சருமம் கிடைக்கும். 

Apr 04, 2025

வெயில் காலத்தில் முகம் எப்போதும் பிரகாசமாகவும், சரும பிரச்சனைகளின்றியும் இருக்க...

ஒவ்வொருவருமே தங்களின் முகம் எப்போதும் பிரகாசமாகவும், சரும பிரச்சனைகளின்றியும் இருக்க வேண்டுமென்று விரும்புவோம். இதற்காக சருமத்திற்கு பலவிதமான பராமரிப்புக்களையும் கொடுத்து பாதுகாத்து வருவோம். ஆனால் கோடைக்காலம் வந்துவிட்டால், இவை அனைத்தும் பாழாகி, சருமத்தில் பலவிதமான பிரச்சனைகளை சந்திப்பதோடு, சருமமும் வெயிலால் கருமையாகத் தொடங்கும்ஆனால் நீங்கள் உங்கள் முகம் வெயில் காலத்தில் கருமையாகக்கூடாது என்று விரும்பினால், ஒருசில பொருட்களைக் கொண்டு தினமும் தவறாமல் பராமரிப்புக்களைக் கொடுக்க வேண்டும். முக்கியமாக ஃபேஸ் பேக்குகளைப் போட வேண்டும்.ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.  பின் அதை முகம், கழுத்து மற்றும் கைகளில் தடவி 3-5 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். * பின்பு அதை 15, 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். * இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2, 3 முறை பயன்படுத்தி வர, சருமம் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும். ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவுடன், சிறிது தயிரை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை முகம், கழுத்து மற்றும் கருமையாக இருக்கும் கைகளில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். * பின்பு அதை 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். * இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தி வந்தால், கருமையாக இருக்கும் சருமம் வெள்ளையாக மாறுவதைக் காணலாம்.ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் தயிரை எடுத்து, அத்துடன் 1/2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.  பின் அதை முகம், கழுத்து மற்றும் கைகளில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். * பின்பு 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். * இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தி வந்தால், சரும கருமை விரைவில் நீங்கும். முதலில்4,5 ஸ்ட்ராபெர்ரியை துண்டுகளாக்கி, பிளெண்டரில் போட்டு, அத்துடன்1 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். * பின் அதை முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு3 முறை பயன்படுத்தி வந்தால், முகம் பளிச்சென்று பொலிவோடு மின்னும்.

Mar 24, 2025

சருமத்தில் உள்ள கருமையை அகற்ற...

வெயிலால் முகம் கருமையாகாமல், பளிச்சென்று வெள்ளையாகவே இருக்க வேண்டுமானால், அதற்கு நம் வீட்டில் உள்ள தயிர் பெரிதும் உதவி புரியும். ஏனெனில் தயிரில் உள்ள லாக்டிக் அமிலம், சருமத்தில் உள்ள அழுக்குகளையும், இறந்த செல்களையும் வெளியேற்றி, சரும செல்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. முக்கியமாக தயிர் மெலனின் உற்பத்தியைக் கட்டுப்படுத்துகிறது. இப்படிப்பட்ட தயிரை ஒருசில பொருட்களுடன் சேர்த்து ஃபேஸ் பேக் தயாரித்து கோடைக்காலத்தில் பயன்படுத்தி வந்தால், முகம் கருமையாகாமல் வெள்ளையாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.  சரும கருமையைப் போக்கும்  தயிர் ஃபேஸ் பேக். ஒரு பௌலில்1,2 டேபிள் ஸ்பூன் தயிரை எடுத்து, அதை நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.பின் அதை முகம், கழுத்து மற்றும் கருமையாக இருக்கும் கைகளில் தடவி3,5 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.அதன் பின்15,20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.இப்படி வாரத்திற்கு2,3 முறை பயன்படுத்தி வந்தால், சருமத்தில் உள்ள கருமையை அகற்றலாம்.

Mar 23, 2025

முகம் அழகு பெற...

தினமும் முகத்தில் சோப்பு போடுவதற்கு பதிலாக, ஆவாரம் பூ பொடி, மஞ்சள் பொடி சேர்த்து, முகத்தில் தேய்த்து குளித்து வந்தால், முகத்தில் உள்ள பருக்கள்,கரும்புள்ளிகள், மருக்கள், கரும் திட்டுக்கள் நிரந்தரமாக நீங்கும். முகம் அழகு பெறும்.

Mar 16, 2025

பொடுகை அடியோடு விரட்ட இஞ்சி - எலுமிச்சை மாஸ்க்!

பொடுகு பிரச்சனையை அடியோடு விரட்டி ஆரோக்கியமான கூந்தல் பெற உதவும் ஹேர் மாஸ்க் தேவையான பொருட்கள் - வேப்பிலை -1 கைப்பிடி |இஞ்சி - 3"அளவு | எலுமிச்சை - 1 | மிதமான ஷேம்பு - 2 ஸ்பூன்செய்முறை முதலில்இஞ்சி, எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி சுத்தமான பாத்திரம் ஒன்றில் சேர்க்கவும்.பின் இதனுடன் வேப்பிலை மற்றும் 2 கப் அளவு நீர் சேர்த்து 15 நிமிடங்கள் வரை கொதிக்க வைத்து, அடுப்பில் இருந்து இறக்கவும். நன்கு ஆறியதும், வடிகட்டி - திப்பைகளை நீக்கி தனி ஒரு கோப்பையில் சேர்க்கவும். பின் இதனுடன் ஷேம்பு சேர்த்து கலக்கி இந்த பேக்கினை கூந்தலுக்கு அப்ளை செய்து 45 நிமிடங்கள் வரை உலர விடவும். பின், மிதமான ஷேம்பு பயன்படுத்தி கூந்தலை அலசவும்.இயற்கை எண்ணெயை தக்க வைக்கும் இந்த மாஸ்க் ஆனது, கூந்தல் வறட்சி பிரச்சனையில் இருந்து தப்பிக்க உதவி செய்கிறது.ஆன்டி பாக்டீரியல் பண்பு கொண்ட எலுமிச்சை, வேப்பிலை பயன்படுத்தி தயார் செய்யப்படும் இந்த மாஸ்க், பொடுகு பிரச்சனையை போக்குகிறது.தலைமுடி வேர் கால்களை பலபடுத்தி, கூந்தல் உதிர்வை தடுக்கும் இந்த மாஸ்க் ஆனது, அடர்த்தியான கூந்தல் பெற உதவி செய்கிறது.

Mar 13, 2025

பளபளக்கும் கூந்தலுக்கு 'முட்டை ஹேர் மாஸ்க்'

கூந்தல் உதிர்வை தடுத்து உறுதியான, பளபளப்பான கூந்தல் பெற உதவும் ஹேர் மாஸ்க் ஒன்றினை முட்டை, ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் கலவையில் தயார் செய்யதேவையான பொருட்கள் - முட்டை - 2| தேங்காய் எண்ணெய் -1 ஸ்பூன் | ஆலிவ் எண்ணெய் - 1 ஸ்பூன்செய்முறை முதலில் எடுத்துக்கொண்ட முட்டையை உடைத்து, அதன் வெள்ளை கருவை பிரித்து தனி ஒரு கோப்பைக்கு மாற்றவும்.பின் இதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கட்டிகள் இல்லா வகையில் நன்கு ஒரு முறை கரைத்துக்கொள்ளவும்.இறுதியாக இதனுடன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்கு ஒரு முறை கரைத்துக்கொள்ள கூந்தல் ஆரோக்கியம் காக்கும் ஹேர் மாஸ்க் தயார்  தயார் செய்த இந்த ஹேர் மாஸ்க்கினை, கூந்தலுக்கு அப்ளை செய்து 30 - 35 நிமிடங்கள் வரை ஊற விடவும். பின், மிதமான ஷேம்பு பயன்படுத்தி தலைக்கு குளித்துவிடவும்.கூந்தல் ஆரோக்கியம் காக்கும் வைட்டமின்கள் நிறைந்து காணப்படும் முட்டையின் வெள்ளை கரு பயன்படுத்தி தயார் செய்யப்படும் இந்த மாஸ்க், கூந்தல் சேதங்களை தடுக்க உதவுகிறது.கூந்தல், உச்சந்தலையில் இயற்கை எண்ணெயை தக்க வைக்கும் பண்பு கொண்ட இந்த ஹேர் மாஸ்க், கூந்தல் வறட்சியை போக்கி மிருதுவான கூந்தல் பெற உதவி செய்கிறது!கூந்தல் வறட்சியை போக்குவதோடு, கூந்தலின் இயற்கை நிறத்தை மீட்டு தரும் தன்மை கொண்ட இந்த ஹேர் மாஸ்க் ஆனது, பளபளக்கும் கூந்தல் பெற உதவி செய்கிறது.

Feb 24, 2025

இடுப்பு மற்றும் வயிற்றில் சேர்ந்துள்ள கொழுப்பு குறைக்கும் கொழுப்பு இழப்பு ஷேக்

கொழுப்பு இழப்பு ஷேக் செய்ய, முதலில், 2 ஸ்பூன் சியா விதைகள் அல்லது சப்ஜா விதைகளை இரவில் ஊற வைக்கவும்.  1-வாழைப்பழம், 2-பாதாம், 2 அக்ரூட் பருப்புகள், 10 முதல் 12 மக்கானா,விதைகளை நீக்கிய 2 பேரீச்சம்பழங்கள்,1 டீஸ்பூன் எள்,1 டீஸ்பூன் ஆளி விதை, 1 தேக்கரண்டி பூசணி விதைகள்,1 தேக்கரண்டி ஊறவைத்த கொண்டைக்கடலை, 1 தேக்கரண்டி வறுத்த வேர்க்கடலை.இவை அனைத்தையும் ஸ்கிம்ட் பாலில் கலக்கவும். இப்போது அதில் இரவு ஊறவைத்த விதைகளை கலந்து பருகவும். தினமும் காலை இந்த ஷேக்கை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதை குடித்த பிறகு, குறைந்தது2 லிட்டர் தண்ணீரை சிறிய இடைவெளி விட்டு அவ்வப்போது குடிக்க வேண்டும். இப்படி செய்தால், ஒரு மாதத்தில், உங்கள் இடுப்பு மற்றும் வயிற்றில் சேர்ந்துள்ள கொழுப்பு குறைந்து, எடையும் குறைந்தது 4 கிலோ குறையும்.

Feb 17, 2025

இயற்கையாக முகம் ஜொலிக்க ஆவாரம்பூ

வெயிலில் கருத்து போகும் முகத்தை ஆவாரம் பூ பொலிவடைய செய்யும்.ஆவாரம்பூ பொடியுடன் ஒரு ஸ்பூன் கசகசா சேர்த்து  காய்ச்சாத பசும்பால் கலந்து நைசாக அரைத்து சற்று அதிகமாக பற்று போல  முகத்திலும், கழுத்தை சுற்றிலும், தடவி வந்தால் தேமல், கருமை நிறம் போன்றவை மாறி பளிச்சென இருக்கும் . தங்கம் போல் மினுமினுக்க,  இயற்கையாக முகம் ஜொலிக்கும்.இந்த பூக்களை நம் சருமத்திற்கு அடிக்கடி பயன்படுத்தும் போது பூவினும் மென்மையான சருமத்தை பெறலாம்.

Feb 16, 2025

சருமத்துக்கும், கூந்தலுக்கும் அழகை தரும் செம்பருத்திபூ

தங்க பஸ்பம் என்று சொல்லப்படும்  செம்பருத்தி பூவை உள்ளுக்குள் எடுப்பதன் மூலம் பலவிதமான மருத்துவ குணங்களை பெறலாம்.பூ.இலை இரண்டுமே சருமத்துக்கும், கூந்தலுக்கும் அழகை தருவதில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. முழுமையான செம்பருத்தி பூவை காய வைத்து பொடித்து கொள்ளவும்.செம்பருத்திபூ பொடி- 3 ஸ்பூன், பாசி பயறு மாவு- 3 ஸ்பூன், பால் தேவைக்கு.இந்த மூன்றையும் நன்றாக கலந்து பேஸ்ட் போல் குழைத்து முகம், கழுத்து, கை, கால்கள் என்று அனைத்து இடங்களிலும் தேய்த்து 1/2 மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் முகத்தில் எண்ணெய் பசை நீங்கி ஈரப்பதம் சீராக இருக்கும். சருமம் புத்துணர்ச்சியுடனும், முகத்தில் தனி அழகும் இருக்கும்.

Feb 11, 2025

குங்குமப்பூ

இவை விலை அதிகம் என்றாலும் முகத்திற்கு அதிக பலனைத் தரும். மாசு, மருக்கள் நீங்க குங்குமப் பூவை பயன்படுத்தலாம்.10 குச்சி குங்குமப்பூ எடுத்து பாலில் ஊறவைத்து அரைத்து முகத்தில் தடவி வருவதால் முகம் பளபளக்கும். கண்களை சுற்றி, உதட்டை சுற்றி, மேலும் முகத்தில் கருமை அதிக மாக இருக்கும் இடங்களில் கூடுதலாக தடவி 1/2 மணி நேரம் ஊறவைத்து முகத்தை கழுவும் போது முகத்தில் இருக்கும் கருமை மொத்தமும் நீங்கி சிவந்த நிறத்தை பெற்று பளிச்சென இருப்பதை உணரலாம். பக்க விளைவு எதுவும் இல்லாத இந்த பேஸ்டை கழுத்து பகுதிகளிலும் தடவி வரலாம்.

1 2 ... 6 7 8 9 10 11 12 ... 24 25

AD's



More News