அமைதியின்மை, பய உணர்வுக்கு
இந்தியாவில் வயதானவர்கள் பொருளாதாரம் இன்மையாலும் நோயினாலும் மற்றவர்களைச் சார்ந்து வாழும் நிலை ஏற்படும் போது பயம் தானாகவே ஏற்படுகின்றது. இதன் தாக்கத்தில் மனம் அமைதியின்மை. மனச்சோர்வு, எதற்கெடுத்தாலும் பய உணர்வு (மனச்சோர்வு, மன அழுத்தம், படபடப்பு, சீசோ பிரினியா,மேனியா) என ஏற்பட்டு மனநோய்க்கு வழிவகுக்கிறது.
நல்ல ஆழ்ந்த உறக்கம் மன அமைதியை தரும் (தூக்கம் வராதவர்கள் இரவில் 6 மணி நேரமும் பகலில் 2 நேரமும் உறங்கலாம்).நல்ல சாத்வீக உணவு உட்கொள்ள வேண்டும் (உப்பு, காரம் மசாலா எண்ணெய் குறைத்து)சிறு உடற்பயிற்சி ஹார்மோன் சுரப்பை சரி செய்து மனப்பதற்றம், பயத்தைச் சரிசெய்கிறது.தியானம் மன அமைதியை மேம்படுத்தும்.வாரம் ஒருமுறை நல்லெண்ணெய்க் குளியல் உடலையும், மனதையும் உற்சாகம் பெற செய்யும்.இயற்கையுடன் உறவாட மனம் அமைதி பெறும். கடற்கரையில் உலாவுதல். பௌர்ணமி இரவில் நிலவினைப் பார்த்தல், காற்றோட் டமான இடத்தில் ஒருமணி நேர ஓய்வு எடுத்தல். செடி, கொடிகளுக்குத் தண்ணீர் விட்டுப் பராமரித்தல், நண்பர்களுடன் உரையாடுதல் ஆகியன செய்ய மனம் அமைதி பெறும்.
0
Leave a Reply