.சப்பாத்தி வெஜ்ரோல்
தேவையான பொருட்கள் -
1/2கப் பட்டாணி,1/2கப் கேரட்,1/2கப்பீன்ஸ்,
1/2கப் கேப்சிங்கம், 1வெங்காயம்,2தக்காளி,
1/2ஸ்பூன் இஞ்சி, பூண்டு பேஸ்ட்,
1கொத்து கறிவேப்பிலை ,சிறிது கொத்தமல்லி,
1/2ஸ்பூன் மஞ்சள் பொடி,1/2ஸ்பூன் மிளகாய் பொடி,
1/2 ஸ்பூன் மல்லி பொடி ,1/2 ஸ்பூன் சோம்பு ,50 கிராம் பட்டர்,
ஆயில்,உப்பு - தேவையான அளவு.
செய்முறை
ஒரு வாணலியில் ஆயில், பட்டர் விட்டு, சோம்பு போட்டு தாளிக்கவும்.
பிறகு அதில் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, போட்டு வதக்கவும். அடுத்து இஞ்சி பூண்டு
பேஸ்ட் போட்டு ,அடுத்து நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி சிறிது வதங்கியதும்,
நறுக்கிய காய்கள், உப்பு சேர்த்து வதக்கவும்.
ஸ்டவ்வை சிம்மில் வைத்து, ஒரு மூடி போட்டு வைக்கவும். ஒரு பத்து நிமிடத்தில் காய்
வெந்துவிடும். காய் கொஞ்சம் கிரன்ச்சியாக இருந்தால் நல்லது.
பிறகு அதில் மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும். நன்கு பச்சை
வாசனை போகும் வரை வதக்கி. கடைசியாக கொத்தமல்லி இலை தூவவும்.
பிறகு சப்பாத்தி செய்யவும். பட்டர் சேர்த்தால் சுவையாக இருக்கும்.
இப்பொழுது சப்பாத்தியின் நடுவில் மசாலாவை வைத்து, முதலில் வலது புறமும், பிறகு இடது
புறமும் மடிக்கவும். இப்போ சூப்பரான சப்பாத்தி வெஜ் ரோல் ரெடி,
0
Leave a Reply