20 TH MAY விளையாட்டு போட்டிகள்
டென்னிஸ்
ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் ஈரானில் நடந்தது. ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் கரண் சிங், ரஷ்யாவின் அலெக் சாண்டர் லோபனோவை சந்தித்தார்.
முதல் செட் 'டை பிரேக்கர்' வரை சென்றது. இதை கரண்சிங் 7-6 என வசப்படுத்தினார். அடுத்த செட்டை 6-2 என எளிதாக கைப்பற்றினார்.
ஒரு மணி நேரம், 41 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் கரண் சிங் 7-6, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார். ஐ.டி.எப்., டென்னிஸ் ஒற்றையர் அரங்கில் முதன் முதலாக கோப்பை வென்றார்.
கோல்ப்
நெதர்லாந்தில் நடந்த பெண்களுக்கான சர்வதேச தொடரில் இந்தியாவின் திக் ஷா தாகர், ஹிதாஷீ பக்ஷி, அவானி பிரஷாந்த் முறையே 9,12,19வது இடத்தை பகிர்ந்து கொண்டனர்.
குத்துச்சண்டை
'சூப்பர் பைட்டர் சீரிஸ்-3' பெங்களூருவில் நடந்த தொடரில் 'வெல்டர்வெயிட்' பிரிவில் இந்தியாவின் பைசான் அன்வர், கானாவின் கபக்போ அல்லோடேவை வீழ்த்தி சாம்பியன் ஆனார்.
0
Leave a Reply