அப்துல்கலாம் விருது பெற்ற அஜித் குமார்.
அஜித்குமார் சின்ன வயசிலிருந்தே கார், பைக் ஒட்டுவது மீது ரொம்ப ஆசை. இவர் ஸ்கூல் படிக்கும் காலத்திலேயே ஏரோமாடலிங் தயாரிப்பு என்றால் தனி ஈர்ப்புதான். அதிலேயே மூழ்கிவிடுவாராம். சென்னை எம்ஐடி தொழில்நுட்ப பிரிவு மாணவர்கள் குழு தக்ஷா என்ற பெயரில் ஒரு போட்டியில் கலந்து கொள்ளப் போவதாக, அஜித் காதில் தகவல் விழுந்தது. இந்த போட்டி ஆஸ்திரேலியாவில் செப்டம்பர் மாதம் நடக்கிறது. மொத்தம் 55 நாடுகள் இந்த போட்டியில் கலந்து கொள்கின்றன. போட்டி என்னவென்றால் ஆள் இல்லா குட்டி விமானம் 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒருவரின் ரத்த மாதிரியை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்துவிட வேண்டும். இதுதான் அந்த போட்டி.அதுமட்டுமல்ல. இந்த ஆள் இல்லா குட்டி விமானத்தின் பயன் என்ன தெரியுமா? பல பேரின் உயிரை விரைவாக காப்பாற்ற முடியும். எப்படி என்றால் உடல் உறுப்புகளை சொண்டு செல்ல சாலை வழியே மணிக்கணக்காகும் .ஆனால் ஆளில்லா விமானம் மூலம் 10 அல்லது 20 நிமிடத்திலேயே கொண்டு செல்லலாம் என கூறப்படுகிறது.
இந்த போட்டியை கேள்விப்பட்ட அஜீத், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திடம் எம்ஐடி, மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குகிறேன். என்றும் அவர்களுக்கு தொழில்நுட்ப உதவிகளை கூட செய்ய தாம் தயாராக இருப்பதாகவும், கூறினார்.அதனை ஏற்ற நிர்வாகமும் சேர்த்து கொள்கிறோம். உங்களுக்கு என்ன சம்பளம் வேண்டும். அஜீத் “எனக்கு சம்பளமே வேண்டாம்” “அப்படி எனக்கு சம்பளம் தர வேண்டுமென்று நீங்கள் விரும்பினால் அதை ஏழை மாணவர்களின் கல்வி உதவிக்காக கொடுத்து விடுங்கள்” என்றார்.
இதனை தொடர்ந்து மாணவர்களுக்கு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் பயிற்சியையும் சளைக்காமல், சலிக்காமல் வழங்கி வருகிறார் அஜீத் .ஆலோசகராக இருக்கும், இந்த தக்ஷா குழுவிற்குதான் விருது கிடைத்துள்ளது.,3 கார் ரேஸ் வின்னர், 12 பைக் ரேஸ் வின்னர் இவர் படித்தது 10வது ஆனால் 5 மொழிகள் பேசுவார், CBSE பாடத்தில் இவரை பற்றி பாடம் உள்ளது.லண்டன் போர்ப்ஸ் வெளியிட்ட உலகின் முதல் 100 ஜென்டில் மேன்களில் அஜித் 62 வது இடம் மெக்கானிக்கல் பார்முலா 1.2.3. ஆகியவற்றிலிருந்து கலந்து கொண்ட உலகிலேயே முதல் நடிகர் உலகிலேயே விமான உரிமம் வைத்திருக்கும், ஒரே நடி கர் அஜித் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஐடிஐ மாணவர்களுக்கு விமான ஆலோசகராக அஜித் உள்ளார்.
0
Leave a Reply