விமானபயணத்தில் மட்டுமல்ல ஏரோபிளேன் மோடை வேறு பல வழிகளில் பயன்படுத்தலாம்
நீங்கள் விமானத்தில் ஏறிய பிறகு போனை ஏரோபிளேன் மோடில் வைக்கும்படி அறிவுறுத்தப்படுவீர்கள்.மொபைல் போன்களில் இருக்கும் ஏரோபிளேன் மோட் விமானத்தில் பயணிக்கும்போது பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் விமானத்தில் ஏறிய பிறகு போனை ஏரோபிளேன் மோடில் வைக்கும்படி அறிவுறுத்தப்படுவீர்கள்.அதற்காக மட்டும்தான் ஏரோபிளேன் மோட் பயன்படுத்தப்படுகிறது என பலரும் நினைத்துக்கொண்டுள்ளனர். ஆனால், ஏரோபிளேன் மோடை வேறு பல வழிகளில் பயன்படுத்தலாம் என்று பலருக்கும் தெரியாது. உங்கள் மொபைல் போனுக்கு போதுமான சிக்னல் கிடைக்கவில்லை என்றால் அது, தொடர்ந்து சிக்னலை தேடிக்கொண்டிருக்கும். இதன் காரணமாக உங்கள் மொபைல் போனின் பேட்டரி எளிதில் காலியாகிவிடும். இதை தடுக்க ஏரோபிளேன் மோட் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மொபைல் போனை ஏரோபிளேன் மோடில் வைத்திருக்கும்போது உங்களால் கவனச்சிதறல் இல்லாமல் வேலை செய்ய முடியும். அழைப்பு, குறுஞ்செய்தி தகவல் என அனைத்தையும் இது நிறுத்தி வைப்பதால் பணியில் கவனம் செலுத்த முடியும்.மருத்துவமனைகளில் உள்ள உணர்திறன் வாய்ந்த உபகரணங்களில் குறுக்கிடாத வண்ணம் பாதுகாக்க ஏரோபிளேன் மோடை ஆன் செய்வதும் பின்பற்றப்படுகிறது. சில சமயங்களில் மொபைல் போன் நெட்வொர்க் கிடைக்காமல் மெதுவாக செயல்படும். அத்தகைய சூழ்நிலைகளில் ஏரோபிளேன் மோடை ஆன் செய்வதன் மூலம் உங்கள் மொபைல் போனுக்கு நெட்வொர்க் சீராக கிடைக்கும்.
0
Leave a Reply