அனந்த் அம்பானியின் அறச்சிந்தனை வந்தாரா (Vantara) எனும் திட்டம்
இந்தியாவின் மாபெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானிக்கு அமைந்திருக்கும் அறச்சிந்தனை, தானம் தர்மம் செய்வதற்கு ஒரு பரந்த மனப்பான்மை, புகலிடம் தேடி வருபவர்களை அரவணைப்பதை நாம் மனதாரப் பாராட்டியே ஆக வேண்டும்.ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ரிலையன்ஸ் பவுண்டேஷன் இணைந்து வந்தாரா (Vantara) எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன. இந்தத் திட்டத்தின்கீழ் துன்புறுத்தப்பட்ட, காயமடைந்த, ஆதரவற்ற விலங்குகளை இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வந்து அவற்றுக்குத் தேவையான பராமரிப்பையும் சிகிச்சையையும் வழங்குவதே இந்த வந்தாரா திட்டத்தின் நோக்கமாகும்.
குஜராத்தில் உள்ள ரிலையன்ஸின் ஜாம்நகர் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு வளாகத்தின் கிரீன் பெல்ட்டில் 3,000 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் பகுதியில் வந்தாரா திட்டம் செயல்படுத்துகிறது. உலகளவில் பாதுகாப்பு முயற்சிகளில் முன்னணி பங்களிப்பாளர்களில் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே வந்தாராவின் நோக்கம். விலங்கு பராமரிப்பு மற்றும் நலனில் முன்னணி நிபுணர்கள் இதில் இணைந்து பணியாற்றுகின்றனர்.3000 ஏக்கர் பரப்பளவில் விரிந்துள்ள இந்த சுத்திகரிப்பு வளாகம் கிட்டத்தட்ட ஒரு காடாகவே காட்சியளிக்கிறது. இது மீட்கப்பட்ட விலங்குகள் செழித்து வளர இயற்கையான, பசுமையான வாழ்விடத்தை தந்துள்ளது.வந்தாரா திட்டம், இந்தியாவிலேயே முதன்முதலாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் இயக்குநர் அனந்த் அம்பானியின் அர்ப்பணிப்போடான தலைமையின் கீழ் உருவாக்கப்பட்டது.
வந்தாரா, அதிநவீன சுகாதாரம், மருத்துவமனைகள், ஆராய்ச்சி மற்றும் கல்வி மையங்கள் உள்ளிட்ட சிறந்த-இன்-கிளாஸ் விலங்கு பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு நடைமுறைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது.அதன் திட்டங்களுக்குள், புகழ்பெற்ற சர்வதேச பல்கலைக்கழகங்கள் மற்றும் இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (IUCN) மற்றும் இயற்கைக்கான உலக வனவிலங்கு நிதியம் (WWF) போன்ற நிறுவனங்களுடன் மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் ஒத்துழைப்பை ஒருங்கிணைப்பதிலும் வந்தாரா கவனம் செலுத்துகிறது.கடந்த சில ஆண்டுகளில், இந்த திட்டத்தின் வாயிலாக 200 க்கும் மேற்பட்ட யானைகள், ஆயிரக்கணக்கான பிற விலங்குகள், ஊர்வன மற்றும் பறவைகளை பாதுகாப்பற்ற சூழ்நிலைகளில் இருந்து மீட்டுள்ளது. காண்டாமிருகம், சிறுத்தை, முதலை மறுவாழ்வு உள்ளிட்ட முக்கிய இனங்களை பாதுகாக்கும் வகையில் செயல்படுகிறது.
0
Leave a Reply