2036-ல் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடத்த விண்ணப்பம்.
உலகின் பெரிய விளையாட்டு திருவிழா ஒலிம்பிக் 4 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும். கடைசியாக பிரான்சின் பாரிசில் 33-வது ஒலிம்பிக் போட்டி நடந்தது .அடுத்த இரு போட்டிகள் 2028-ல் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் , 2032-ல் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் நடக்க உள்ளன. இதனிடையே சமீபத்தில் மும்பையில் நடந்த சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐ.ஓ.சி) 141-வது கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில் "வரும் 2036-ல் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடத்த ஆர்வமாக உள்ளோம்". என்றார். இதற்கு ஐ.ஓ.சி, தலைவர் தாமஸ் பாக் ஆதரவு தெரிவித்து இருந்தார்.
அடுத்து கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்காவின் நியூயார்க்கில் மோடி கூறுகையில் விரைவில் இந்தியாவில் ஒலிம்பிக் நடத்துவதை பார்ப்பீர்கள். இதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம் என்றார்.
0
Leave a Reply