ஸ்மித்தை டக் அவுட்டாக்கிய மகிழ்ச்சியில் பும்ரா.
வேகத்தில் மிரட்டிய பும்ரா, 4 விக்கெட் சாய்த்தார். ஸ்மித்தை டக் அவுட்டாக்கிய மகிழ்ச்சியில் பும்ரா.ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டி கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் பெர்த்தில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் நேற்று துவங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் பும்ரா பேட்டிங் தேர்வு செய்தார்.
இந்திய அணி முதல் இன்னிங்சில் 150 ரன்னுக்கு சுருண்டது. அடுத்து முதல் இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலிய அணி, இந்திய வேகத்தில் அதிர்ந்தது. பும்ரா பந்தில் முதலில் மெக்ஸ்வீனி (10) அவுட்டானார். போட்டியின் 7வது ஓவரை வீசிய பும்ரா, 4வது பந்தில் கவாஜாவை 5வது பந்தில் ஸ்மித்தை கோல்டன் டக் அவுட் செய்து அசத்தினார்.
மீண்டும் மிரட்டிய பும்ரா, கேப்டன் கம்மின்சை (3) பெவிலியனக்க அனுப்பினார். முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 67 ரன் எடுத்து 83 ரன் பின் தங்கி இருந்தது. பும்ரா 4 சிராஜ் 2, ஹர்ஷித 1 விக்கெட் கைப்பற்றினார். இன்ற எஞ்சிய விக்கெட்டுகளை விரைவில் கைப்பற்றும் பட்சத்தில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தலாம்.
0
Leave a Reply