கருணை உள்ளம் டாக்டர் சாந்தா
புகழ்பெற்ற புற்று நோய் மருத்துவ நிபுணர் சென்னை அடையாறு புற்று நோய்க் கழகத்தின் தலைவர் பன்னிரெண்டு படுக்கைகளுடன் டாக்டர் சாந்தா மற்றும் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகிய இரண்டே மருத்துவர்களுடன் தொடங்கிய இந்தப் புற்று நோய் மருத்துவமனை இன்று மிகப்பெரிய அளவில் விரிவரைந்துள்ளது. மகஸேஸே விருது பத்மபஷண் விருது போன்ற விருதுகள் இவரை நாடி வந்துள்ளன. அரசு மருத்துவர்களுக்கான பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வை வெற்றிகரமாக முடித்தபோது அவருக்கு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் சேரும் வாய்ப்பு கிடைத்தது.
அந்தக் காலத்தில் மருத்துவத்தில் முது நிலை பயின்ற பெண்கள் மகளிர் நலப் பிரிவில்தான் வேலை செய்வார்கள். ஆனால் சாந்தா புற்று நோய்க் கழகத்தின் முக்கிய மருத்துவராக சேர்ந்தார். அவரது குடும்பத்தினருக்கே கூட இதில் கருத்து வேறுபாடுகள் உண்டாம். உடல் நலத்துக்கான தமிழக திட்டக் கமிஷனில் டாக்டர் சாந்தா ஓர் உறுப்பினர். தேசிய மருத்துவ அறிவியல் அகாதமியில் இவர் தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர். நோபல் விருது பெற்ற டாக்டர் சந்திரசேகர் சி வி ராமன் ஆகியோர் சாந்தாவின் நெருங்கிய உறவினர்கள். தன் மருத்துவச் சேவையில் நிறைவு உண்டு .
ஆனால் தாத்தாவின் ஆசையான நீ வயலின் கத்துக்கோ எனக் கூறி, நடைமுறைப்படுத்தாததில் கொஞ்சம் வருத்தம் உண்டாம் இவருக்கு. மகஸேஸே விருது இவருக்கு வழங்கப்பட்ட போது அதில் 87 வயதான சாந்தா நோயாளிகளைப் பார்க்கிறார். இன்னமும் அறுவைச் சிகிச்சைகளைச் செய்கிறார். இன்னமும் ஒரு நாளின் எந்த நேரத்திலும் தன் கடமையைச் செய்ய தயாராக இருந்தார் என்று எழுதப்பட்டிருந்தது. 2021 — 60 ஆண்டுகளுக்கு மேலாக அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவராக பணியாற்றிய சாந்தா, இப்படி ஒரு தமிழ்ப்பெண்மணி நம்மிடையே இருந்தது நமக்கு பெரும் பெருமை.
0
Leave a Reply