ஓசோன் படலம் பாதிப்பு
சூரியனிடம் இருந்து வரும் புற ஊதா கதிர்கள் நேரடியாக மனிதர்களை தாக்குவதை'ஓசோன்' படலம் பாதுகாக்கிறது. இதன் விரிசல் ஆண்டு தோறும் மாறுபடும். இந்நிலையில் 2023 செப். 16ல் அண்டார்டிகா மேல் பகுதியில் உள்ள ஓசோன் படலத்தின்ஓட்டை பிரேசிலின் பரப்பளவை விட மூன்று மடங்கு(2.6 கோடி சதுர கி.மீ.,) பெரிதாகியுள்ளது என செயற் கைக்கோள் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.2022 ஜனவரியில் பசுபிக் பெருங்கடல் ஆழத்தில் ஏற்பட்ட டோங்கோ எரிமலை வெடிப்பு இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
0
Leave a Reply