இராஜபாளையத்தில் குடிநீர் கலங்கலாக வருகிறது
இராஜபாளையம் நகராட்சிக்குட்பட்ட 42 வார்டுகளில் குடிநீர் வினியோகிக்க ஆறாவது மைல் நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு அய்யனார் கோவில் ஆற்று நீர் தேக்கி அதன் அருகிலேயே குளோரினேசன, பில்டர் பெல்ட் எனும் சுத்திகரிப்பு செய்து அனைத்து பகுதிகளுக்கும் வினியோகிக்கப்பட்டு வருகிறது.வடக்கு ஆண்டாள்புரம், பாரதி நகர், ஸ்ரீரெங்கபாளையம், இந்திரா நகர், மலையடிப்பட்டி தெற்கு உள்ளிட்ட 40,42,42, வார்டு பகுதிகளில் சப்ளையாகும் குடிநீர் கடந்த ஒரு மாதமாக கலங்கலாக வருகிறது. இதனால் காய்ச்சல் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளதுடன், குடிநீரை விலைக்கு வாங்கி உபயோகிக்கின்றனர்.நகராட்சி தலைவர் MRS பவித்ரா கலங்கலாக குடிநீர் வருவதை தவிர்க்க அனைத்து மேல்நிலை தொட்டிகளையும் சுத்தப் படுத்தி விட்டோம், தற்போது பெறப்படும் கூட்டுகுடிநீர் சங்கரன்கோவில் நீரேற்று பகுதியிலேயே சுத்தப்படுத்தி அனுப்புகின்றனர்.முன்பே குழாய் பதித்து அதில் சேர்ந்துள்ள மண் தற்போது கலந்து வரவாய்ப்பு உள்ளது. கழிவுநீர் என்றால் துர்நாற்றம் தெரிந்துவிடும், இருப்பினும் சப்ளையாகும் குடிநீரை காய்ச்சி குடிக்க அறிவுறுத்தி உள்ளார்.
0
Leave a Reply