வெப்பக்காற்றினால் வற்றும் கண்மாய்கள்
இராஜபாளையம் சுற்று வட்டாரத்தில இந்த ஆண்டு தொடக்கத்தில் பருவ மழை வழக்கத்திற்கும் அதிகமாக பெய்ததால் பெரும்பாலான கண்மாயில் நீர் நிறைந்து காணப்பட்டது. இதனால் தரிசாக இருந்த கண்மாய் ஒட்டிய நிலங்களிலும் நெல் சாகுபடிபரப்பு அதிகரித்தது.இந்நிலையில் தன்ணீர் அதிகம் தேவைப்படும் நெல் நடவுப்பணிகள் நடந்து 10 முதல் 40 நாட்களை கடந்த நிலையில் வெப்பம் அதிகரித்து அனல் காற்றின் தாக்கமும், கூடியுள்ளது.
இதனால் இராஜபாளையம் கடம்பன்குளம், கருங்குளம், சேத்தூர் மன்னர்முடி, அயன்கொல்லங்கொண்டான் பெரிய கண்மாய், தேவதானம், பெரியகுளம் வாண்டையார் குளம், உள்ளிட்ட பெரும்பாலான கண்மாய்களில் தண்ணீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. வழக்கமான பங்குனி மாத மழை இதுவரை பெய்யாததால் வெயிலின் தாக்கத்தால் மடை வழியே நீர் பாய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கிறார்கள்.
0
Leave a Reply