ராஜபாளையம் வழியாக குருவாயூருக்கு எக்ஸ்பிரஸ் ரயில்
ராஜபாளையம் வழியாக நேற்று முதல் மதுரையில் இருந்து கேரள மாநிலம் குருவாயூருக்கு எக்ஸ்பிரஸ் ரயில் 11முன்பதிவில்லா பெட்டிகள், இரண்டு படுக்கை வசதி ,ஒரு ஏ.சி., என 14 பெட்டிகளுடன் இப்பகுதியினரின் நீண்ட நாள் கோரிக்கைப்படி தென்னக ரயில்வே சார்பில் இயக்கப்படுகிறது.
ராஜபாளையம் ரயில் பயனாளர்கள் சங்க தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில், ரயிலுக்கு இன்ஜினுக்கு வாழை மர தோரணம், மாலை அணிவித்து, ரயில் ஓட்டுநர், டிக்கெட் பரிசோதகர் உள்ளிட்டோருக்கு பொன்னாடை போர்த்தி இனிப்பு வழங்கி இதை கொண்டாடினர். நகர் பாஜ., கட்சியினர் பொதுமக்கள், ரயில் பயணிகள் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply