புவி வெப்பமயமாதல்
நாம் எந்த அளவு இயற்கையை நேசிக்கிறோமோ, அதைவிட பன்மடங்கு இயற்கை நம்மை நேசிக்கிறது. . நாம் இயற்கையை அழிக்கும்போது அதன் சீற்றமும் பல மடங்காக தான் இருக்கும். இதை மனதில் கொண்டு நாம் செயல்பட வேண்டும் புவி வெப்பம் அடைந்து அழிவை நோக்கி செல்லும் நிலை உருவாகிவிட்டது. இதனை தவிர்க்க நாம் இயற்கையை நோக்கி வேகமாக திரும்ப வேண்டும். எனவே புவி வெப்பமயமாவதை தடுக்கும் முக்கிய காரணியாக இருக்கும் மரங்களை வளர்க்க வேண்டும். இது இன்றைய சூழ்நிலையில் இன்றியமையாததாக இருக்கிறது. எனவே வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் என்ற நிலை மாறி ஆளுக்கொரு மரம் வளர்ப்போம் என்று பேசும் நிலைக்கு வந்துள்ளோம். எனவே இன்று இயற்கை அழிவை காக்க, வெப்பம் தவிர்க்க முதற்காரணியாக மரக்கன்று களை நட்டு வளர்க்க வேண்டும்.
தற்போது விளைநிலங்கள் தண்ணீர் பற்றாக்குறை, காலநிலை மாற்றம் என்று பல்வேறு காரணங்களால் தரிசு நிலங்களாக மாறி வருகின்றன. இவற்றில் சில வீட்டுமனைகளாக மாற்றம் செய்யப்படுகின்றன. இதனால் இயற்கையை பாதுகாப்பதை மறந்து அழிவை நோக்கி செல்கிறோம். உதாரணமாக சுனாமி புயல், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை சிற்றங்கள் ஏற்படுகின்றன. மரங்களால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. மரங்கள் தூய்மையான காற்றை நமக்கு வழங்குகிறது. வெப்பத்தை தணிக்கிறது. பறவைகளின் சரணாலயமாக திகழ்கிறது. மண் அரிப்பை தடுக்கிறது. நிலத்தடி நீரை பாது காத்து மழை பெய்ய பெரிதும் உதவுகிறது.
இயற்கையோடு வாழ்வோம் பூ, காய், கனி போன்றவற்றை தருகிறது. இயற்கை சீற்றங்களை தடுக்கிறது.. மேலும் ஒரு இயற்கையான சூழ்நிலையை உருவாக்க நம்மால் முடிந்த அளவு நம் வீட்டை சுற்றி உள்ள பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும். 100 மரக்கன்றுகளை நட்டாலும் அதை சரியான முறையில் பாது காத்து வளர்த்தாலே மிகப்பெரிய சமுதாய தொண்டு. பூமியை குளிர்விக்க மரங்கள் அவசியமாகும். ஒரு நாட்டில் 35 சதவீத நிலப்பரப்பு வனமாக இருக்கவேண்டும். வனம் இருந்தால் மழை பொய்க்காது. ஆகவே மாணவ செல்வங்கள் மரக்கன்று நட்டு வளர்ப்பதன் அவசியத்தை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.
0
Leave a Reply