ராம்கோ இன்ஜினியரிங் கல்லுாரி யில் பட்டமளிப்பு விழா
ராஜபாளையம் ராம்கோ இன்ஜினியரிங் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.பல்வேறு துறைகளை சேர்ந்த 266 மாணவர்கள் பட்டம், பாராட்டு சான்று பெற்றனர். முதல்வர் கணேசன் வரவேற்றார். கல்வி குழும தலைமை அதிகாரி வெங்கட்ராஜ், நிர்வாக பொது மேலாளர் செல்வராஜ் பங்கேற்றனர்.
ராம்கோ குரூப் தலைவர் பி.ஆர்.வெங்கட்ராம ராஜா தலைமை வகித்து பேசுகையில், "ஏற்கனவே பட்டம் பெற்ற மாணவர்கள் ராம்கோ சிமென்ட்ஸ், ராம்கோ டி.சி.எஸ் போன்ற முன்னணி நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர். சர்வதேச மட்டத்தில் நிலையான வளர்ச்சி இலக்குகளை மையமாகக் கொண்ட ஒப்பந்தத்தின் உறுப்பினராக கல்லுாரி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தாங்கள் பெற்ற அறிவு, திறன்களை சமூகம், நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும்" என்றார்.அண்ணா பல்கலை துணை வேந்தர் வேல்ராஜ் பேசுகையில்,"அறிவியல் துறைகளில் இந்திய மாணவர்களுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. சுற்றுச்சூழலை சீர்குலைக்காமல் நிலையான வளர்ச்சியை உண்டாக்க வேண்டும்"என்றார்.துணை முதல்வர் ராஜ கருணாகரன் நன்றி கூறினார்.
0
Leave a Reply