தலைமுடி வறட்சியை போக்கும் செம்பருத்தி இலைகள்
குளிர்ச்சியான இலைகள் என்பதால்,பெரும்பாலும் செம்பருத்தியை தலைக்கு பயன்படுத்துகிறார்கள்..ஷாம்புகளில் மூலப்பொருட்களாக பயன்படுத்துகிறார்கள்..செம்பருத்தியின் பூக்களும், இலைகளும் இரண்டுமே மருத்துவ குணம் நிறைந்தது.தலைமுடி வறட்சியை போக்குவதற்கும், தலைமுடி கொட்டுவதை நிறுத்தவும், தலைமுடியும் அதிகமாக வளரவும், கண்களுக்கும் குளிர்ச்சி கிடைக்கவும், இந்த செம்பருத்தி பூக்கள், இலைகள் உபயோகமாகின்றன. வெறும் இலைகளையும் தலைக்கு கண்டிஷனர் போல பயன்படுத்தலாம்.. இந்த இலையை மைய அரைத்து தலைக்கு தடவினால், இயற்கையான கண்டிஷனர் கிடைத்துவிடும்..பேன்கள், அரிப்பு இருந்தாலும் நீங்கிவிடும்.. அல்லது வெறுமனே செம்பருத்தி பூக்களை,தலையில் வைத்துக் கொண்டு தூங்கினாலும், இந்த பூக்களின் வாசனைக்கு பேன்கள் ஓடிவிடும்...
0
Leave a Reply