இராஜபாளையம் நகராட்சியில் மேம்பாட்டு பணிகளுக்காக தோண்டப்பட்ட ரோடு சேதம் அடைந்ததால் பாதிப்பு
இராஜபாளையம் நகராட்சியில் தாமிரபரணி குடிநீர், பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடந்து வருகின்றன. இதனால் நகராட்சிக்குட்பட்ட அனைத்து ரோடுகளும் முழு அளவில் தோண்டப்பட்டு 80 சதவீதம் புதிய ரோடு அமைக்கப்பட்டு விட்டது. ரோடு பணிகளின் போது வாறுகால், பக்கவாட்ட கவரை உயர்த்தாமல் ரோடு அமைத்துள்ளனர். இதனால் வாறுகாலை விட ரோடு உயர்ந்து முழுமை அடையாமல் சாலைகள் பக்கவாட்டில் சரிந்தும் பல இடங்களில் சேதம் அடைந்தும் உள்ளது. இதனால் குறுகலான தெருக்கலில் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
இராஜபாளையம் நகராட்சி 16 வது வார்டில் கூரைபிள்ளையார் கோவில் தெரு, பெத்தையா தெரு, திருவள்ளுவர் தெரு உள்ளிட்ட சந்துகள் அடங்கியுள்ளது. தூய்மைபணியாளர்கள் வீடு தேடி வந்து குப்பை பெறுவதில் கடுமை காட்டுவதாகவும், கழிவுநீர் தேக்கத்தை அகற்றுவதில் மெத்தனம் உள்ளதாக கூறுகின்றனர். திருவள்ளுவர் தெரு தொடக்கத்தில் பேவர் பிளாக் ரோடு சிதைந்தும், தெருவின் நடுவே வாறுகால் தலைப்பாலம் உடைந்தும் விபத்து ஏற்படுத்துகிறது.பெத்தையா தெரு, திருவள்ளுவர் தெரு, பிள்ளையார் கோயில் தெரு பகுதி சந்துகளில் மேம்பாட்ட பணிகளுக்காக தோண்டப்பட்டு புதிய ரோடு போடப்படவில்லை. குடியிருப்பு இடையே குவிக்கப்படும் குப்பை முறையான விழிப்புணர்வு ஏற்படுத்தி சரி செய்ய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
0
Leave a Reply