அனைத்து உலக மாற்றுத்திறனாளிகள் தினம் - 2024 -ஐ முன்னிட்டு, மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் (22.11.2024) மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில், அனைத்து உலக மாற்றுத்திளனாளிகள் தினம் - 2024 -ஐ முன்னிட்டு, மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நீங்கள் அனைவரும் பள்ளியில், காப்பகத்தில் நன்றாக படிப்பது போல், விளையாட்டும் மிக முக்கியம். குறிப்பாக மாற்றுத்திறனுடைய சிறப்புக் குழந்தைகள் அதிகமான விளையாட்டு பயிற்சிகள் செய்வதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். நீங்கள் மகிழ்ச்சிக்காகவும் விளையாடலாம். உடல் நலனுக்காவும் விளையாடலாம். உங்கள் அனைவரையும் ஊக்குவிப்பதற்காக தான் விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.அதுமட்டுமல்லாமல் நீங்கள் அனைவரும் தொடர்ச்சியாக விளையாடி கொண்டு பயிற்சி எடுத்தால் தேசிய அளவில் பல்வேறு நாடுகளில் நடக்கக்கூடிய பாரா ஒலிம்பிக் மற்றும் அது தொடர்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு நடத்தப்படக்கூடிய அனைத்துப் போட்டிகளில் பங்கு பெறலாம்.
தமிழ்நாட்டை சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர்கள் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெற்று பதக்கங்கள் பெற்று இருக்கிறார்கள். அதனால் நீங்கள் அனைவரும் விளையாட்டிற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.நாம் படிப்பிற்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அந்த அளவிற்கு விளையாட்டிற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வருகின்ற டிசம்பர் -3ம் தேதி மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, நமது மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த இருக்கிறோம். அதில் ஒரு பகுதியாக விளையாட்டு நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கும், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கும் இது ஒரு மிக முக்கியமான வாய்ப்பு. இதனை அனைவரும் நன்றாக பங்கேற்று, உங்கள் திறனை சிறப்பாக வெளிப்படுத்தி பரிசுகளை பெறுவதற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்வில், உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.ஹிமான்சு மங்கள்,I A S, மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.குமார மணிமாறன், மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply